Tuesday, July 07, 2020

செரங்காடு கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 06/07/2020 அன்று, செரங்காடு    கிளை சந்திப்பு   செரங்காடு   கிளை  மர்கஸில்,   மாவட்ட   செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்    தலைமையில்   நடைபெற்றது.



கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள்  ஷேக் பரீத் , இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, July 06, 2020

இரத்ததானம் - MSநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 05/07/2020 அன்று மதுசூதனன் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில் B+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் பஷீர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

நிர்வாகக்குழு கூட்டம் _03/07/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 03/07/2020 வெள்ளிக்கிழமை   மதியம்  3:00  மணி  முதல் மாவட்ட   தலைமையக  அலுவலகத்தில்  மாவட்ட தலைவர்  நூர்தீன்   தலைமையில்   நடைபெற்றது.



கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.


மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைகளை நேரில் சென்று சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்து தேவையான ஆலோசனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

Thursday, July 02, 2020

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 01/07/2020 அன்று பெரிய தோட்டம்   கிளை சந்திப்பு  பெரிய தோட்டம்  கிளை  மர்கஸில்,   கிளை பொறுப்பாளர்மாவட்ட   துணைச்செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்    தலைமையில்   நடைபெற்றது.


கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

இதில் கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், சமுதாய சேவைப்பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  

  கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Friday, June 26, 2020

இரத்ததானம் -MSநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 25/06/2020 அன்று கமலவேணி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, June 25, 2020

இரத்ததானம் _ MSநகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 22/06/2020 அன்று சுந்தராஜன் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் ஷாஜஹான் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, June 22, 2020

இரத்ததானம் _MS நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 21/06/2020 அன்று ஜெயம்மாள் என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
A+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் குத்புத்தீன் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, June 20, 2020

இரத்ததானம் _ திருப்பூர் _MSநகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 20/06/2020 அன்று நஜீர் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில் A1B+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் இப்ராஹீம்கான் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 19/06/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 19/06/2020 வெள்ளிகிழமை அன்று  மதியம்  3:00  மணி  முதல் மாவட்ட   தலைமையக  அலுவலகத்தில்  மாவட்ட தலைவர்  நூர்தீன்   தலைமையில்   நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.





அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, June 18, 2020

இரத்ததானம் - MSநகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 17/06/2020 அன்று வடிவேல் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் இப்ராஹீம் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததானம் _ திருப்பூர் _MSநகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 17/06/2020 அன்று வடிவேல் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்

O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, June 15, 2020

நன்றி அறிவிப்பு - இணையவழி போராட்டம்

நன்றி அறிவிப்பு

கண்ணியத்திற்குரிய கிளை நிர்வாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் 

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து தாயகம் அழைத்து வர  மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி  15/06/2020  திங்கள் கிழமை அன்று காலை 10:30 மணி முதல் 10:45வரை  இணையவழி போராட்டத்தை 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்தது.

தூரப்பிரதேசத்தில் துன்பப்படும் மக்களை மீட்க,  அவர்களின் துன்பம் நீங்க நமது சக்திக்குட்பட்ட ஆரம்ப கட்ட உதவியாக அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் அமைந்த இந்த போராட்டத்தை 

நமது மாவட்டத்தின் ஒவ்வொரு கிளை நிர்வாகிகளும் தமது பகுதிகளில் சிறப்பாக இந்த இணையவழி போராட்டத்தை சிறப்பாக நடத்தினீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

பாதிப்பிற்குள்ளான பொதுமக்களின் இன்னலை தீர்க்க உடனடியாக அறிவித்த இந்த போராட்டத்தை சிறப்பாக நடைபெற உழைத்த அணைத்து நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரா..

அரசுகள் அந்த பாதிப்பிற்குள்ளான மக்களை விரைந்து தாயகம் அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

உரிய நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மக்களுக்கு உதவும் வகையிலும் அரசை நிர்பந்திக்கும் வகையில் அடுத்த கட்ட செயல்பாடுகளை மாநில தலைமை ஆலோசித்து அறிவிக்கும்.

இந்த இணையவழி போராட்டத்தில் இணைந்து ஒத்துழைத்ததை விட வீரியமாக வரும் காலத்தில் நீதிக்காக, நியாயத்திற்காக ஒத்துழைக்க அணைத்து கிளை நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 


இப்படிக்கு, 
மாவட்ட தலைவர்,
திருப்பூர் மாவட்டம்.

இணைய வழிப் போராட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக  மீட்க கோரியும்,



 அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும்


 மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் இணைய வழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 15/6/2019 திங்கட்கிழமைஅன்று  திருப்பூர்  மாவட்டம் முழுவதும் உள்ள அணைத்து கிளை பகுதிகளிலும்  காலை 10.30 முதல் 10.45 வரை  மாபெரும் இணையவழி போராட்டம் நடைபெற்றது.  

இந்த இணைய வழிப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி  பங்கேற்றார்கள்.

வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக  சென்ற தமிழக மக்கள் பலர் கொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் நிறுத்தப்பட்டதால் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப முடியாமல்  சிக்கிக் கொண்டுள்ளனர். 

அவர்கள் உண்ண உணவின்றி,  இருக்க இடமின்றி சாலைகளில் படுத்துறங்கும் அவலம் இன்று வரை நீடித்து வருகின்றது.


தமிழக மக்களை மீட்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றன.  

வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள தமிழக மக்கள் தங்களை மீட்குமாறு கண்ணீர் மல்க அவலக்குரல் எழுப்பும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.


அதனைத் தொடர்ந்தே வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை மீட்கும் பொருட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் இணையவழி போராட்டம் அறிவிக்கப்பட்டு திருப்பூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய வழி போராட்டத்தில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும்  மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி இணையவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்களது வீடுகளின் வாசல்களிலும், மொட்டை மாடிகளிலும் நின்று இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அதை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி அதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தங்களின்  தமிழக மக்களை  மீட்க  குரல் கொடுத்துள்ளார்கள்.










Sunday, June 14, 2020

இரத்த தானம் - உடுமலை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக16.06.2020 உடுமலை அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி சகோதரிக்காக B+ve ஒரு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, June 13, 2020

இரத்ததானம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  13/6/2020 சனிக்கிழமை அன்று ஒரு சகோதரியின் அவசர சிகிட்சைக்காக

 முபாரக் என்ற சகோதரர் மூலம்  O+ இரத்தம் ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில்  இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, June 11, 2020

இரத்ததானம் _ திருப்பூர் _ MSநகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 11/06/2020 அன்று நவீன் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்

O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் மன்சூர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததானம் MSநகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 11/06/2020 அன்று நவீன் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் சிராஜ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, June 08, 2020

அவசர_இரத்ததானம் _ திருப்பூர்_மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 8/06/2020 அன்று திருப்பூர் பகுதி சேர்ந்த சரஸ்வதி அவர்களின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில்

O+tve ஒரு யூனிட் இரத்தம் சகோதரர் அப்பாஸ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, June 06, 2020

இரத்ததானம் - தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  திருப்பூர் மாவட்டம் #தாராபுரம் கிளையின் சார்பாக 6/6/2020 சனிக்கிழமை அன்று ஜாபர் என்ற சகோதரர் மூலம்
A நெகடிவ் ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துமனை அவசர தேவை இருப்புக்காக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, May 28, 2020

இரத்ததானம் - தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 28/5/2020 புதன்கிழமை அன்று காதர் என்ற சகோதரர் மூலம் AB postive ஒரு யூனிட் பவுன் என்ற சகோதரிக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, May 27, 2020

பித்ரா2020 _ திருப்பூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பித்ரா #பெருநாள்_தர்மம் ₹5,67,117/- (ரூபாய் ஐந்து இலட்சத்தி அறுபத்தி ஏழாயிரத்து, நூற்றி பதினேழு) மதிப்புள்ள அரிசி, உணவுப்பொருள்கள், மற்றும் உணவிற்காக பொருளாதாரமாக, 1598 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ஏழைகளும் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாடிட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் போதனையை ஏற்று பொருளாதார உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக..!

பல்வேறு களப்பணிகளுக்கும் மத்தியில் இப்பணியையும் செவ்வனே செய்த திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும், களப்பணியாளர்களுக்கும் இறையருளைப் பிரார்த்தித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரன்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருப்பூர் மாவட்டம்.

இரத்ததானம் 26052020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 26 5 2020 அன்று உடுமலை சகோதரி நாகலட்சுமி அவர்களின் அறுவை சிகிச்சைக்காக O- நெகட்டிவ் இரத்தம் ஒரு யூனிட் இரத்த தானம் சகோதரர். அப்துல்ரஹ்மான் அவர்கள் மூலமாக வழங்கப் பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, May 08, 2020

அவசர இரத்ததானம் 07052020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 7/05/2020 அன்றுதிருப்பூர் பகுதி சேர்ந்த நஸ்ரின் பானு என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில்

O+tve இரத்தம் ஒரு யுனிட் சகோதரர் , சுரேஸ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.