Tuesday, January 26, 2021
72வதுகுடியரசுதின_தெருமுனைக்கூட்டம் - உடுமலை
Sunday, January 03, 2021
உடுமலை கிளை தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 03/01/2021அன்று மாலை 5:00 முதல் 7:30 மணி வரை கிளை தர்பியா உடுமலை மஸ்ஜிதுத் தக்வாவில் நடைபெற்றது.
சகோதரர் லுக்மான்.MISc., அவர்கள் அமல்களும், இன்றைய இஸ்லாமியர்களும் எனும் தலைப்பில்,
அமல்களில் ஆர்வமாக ஈடுபட்டால் மறுமை வெற்றி என்பதை தெளிவாகக் சொல்லி வகுப்பு நடத்தினார்கள்.
மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 01012021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் 01/01/2021 ஞாயிற்றுக் கிழமை அன்று 7 மணிக்கு துவங்கி நடைபெற்றது
கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மாவட்ட பேச்சாளர் சகோ. அபூபக்கர் சஅதி அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் அவர்கள் அல்கைராத் பெண்கள் கல்லூரியின் செயல்பாடுகளை விளக்கி, பட்டமளிப்பு விழா மாணவியர் சேர்க்கைகளுக்கு ஒத்துழைக்கவும், கிளைகளில் மகதப் மதரசாக்களை மேம்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா செயல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அணைத்து கிளை நிர்வாகங்களை பாராட்டி, இனி அந்த இளைஞர்களை நல்வழியில் பயன்படுத்தும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாநில துணைத்தலைவர் பா.அப்துர்ரஹ்மான் அவர்கள் நமது ஜமாஅத் இம்மை மறுமை வெற்றிக்கான ஏகத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் மாநில நிர்வாக தாவா பணிகளின் விபரங்களையும், அதற்க்கு ஏகத்துவவாதிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கினர்கள்.
மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
Tuesday, December 29, 2020
பொது ஆலோசனைக் கூட்டம் - VKP
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 28/12/2020 அன்று இஷா விற்கு பின் VKP கிளை மர்கஸில் மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர் ரபீக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வடுகன்காளிபாளையம், மங்கலம், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், R.Pநகர் ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மங்கலம் பகுதி கிளைகளின்
பங்களிப்பு பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட கிளை
சகோதரர்கள் இனிய மார்க்கம் நிகழ்ச்சி பெரும் வெற்றி அடையும் வகையில், உத்வேகமாக பணிகளை செய்து,
மங்கலம் பகுதியில் சமூக நல்லிணக்கம் உருவாகும் வகையில் பணிகளை அமைத்து, பொதுமக்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பிறமத மக்களை திரட்ட உறுதி வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

















