தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 18.12.19
அன்று, மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
பெரியகடை வீதி கிளை பகுதியில் ஒரு சகோதரரின்
இடத்தில் 28.12.2012 முதல் ஜும்ஆ மர்கஸ் அமைத்து, மதரசா மற்றும் ஜும்ஆ தொழுகைகள்
நடைபெற்று வந்தது. அந்த இடத்தை நமக்கு வழங்கிய சகோதரருக்கு அந்த இடம் தேவை
ஏற்பட்டதால் வரும் 27/12/2019 ஜும்ஆ வுடன் காலி செய்து தரவேண்டி இருப்பதை பற்றியும்,
அவருக்கு மாவட்டமற்றும் கிளை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிப்பதைப் பற்றியும்,
தொடர்ந்து அந்த பகுதியில் மர்கஸ் அமைத்து குழந்தைகள் மதரசா, ஐவேளைத்தொழுகை, ஜும்ஆ தொழுகை மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் பெரிய கடை வீதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:
Post a Comment