மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா (CAB) வைக் கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18/12/2019 புதன்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சகோதர சகோதரிகள் தமது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு அநியாயத்திற்கு எதிராக ஆர்பரித்தனர்.
அநியாயத்தை கண்டித்து ஆக்ரோசமாக கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
சகோதரர். M.S. சுலைமான் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
அநியாயமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், சட்டம் நிறைவேற காரணமான BJP, ADMK வை மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்றும் முழங்கினார்கள்.
அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பட்டத்திற்கு வந்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்து இனி நீதிக்காக நாம் உயிரையும் கொடுப்போம் எனும் சூளுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்









No comments:
Post a Comment