தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 26-6-2022 அன்று காமராஜ் நகர் கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் காமராஜ் நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.
இதில் கிளை சார்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
காமராஜ் நகர் கிளை சார்பாக நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவை மேம்படுத்தும் வகையில் மதரஸா பெற்றோர் சந்திப்பு நடத்துவது மதரஸா யூனிபார்ம் மக்கானா, ID CARD, மதரஸா பேக் கிளை சார்பாக ஏற்பாடு செய்து தருவது சம்பந்தமாகவும்
பெண்கள் பயான் வாரந்தோறும் 2 வீடுகளில் கிளையில் ஏற்பாடு செய்வது சம்பந்தமாகவும்
ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாகவும்
ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்குதல், இரத்த வகை கண்டறியும் முகாம், ரேசன் கார்டு திருத்த முகாம், இலவச டியூசன் வகுப்புகள் சம்பந்தமான பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மாவட்டத்திற்கான கிளையின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment