தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
சார்பில், 25/01/2022 அன்று மாலை மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (13) மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில், திருச்சி V.S.முஹம்மது
இப்ராகிம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வாரத்தில் நடைபெற்ற பணிகள் பற்றியும், வரும் வாரத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அதில் கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள்
பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள 3 கிளைகளுக்கு
பொதுக்குழு நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிளைகள் இல்லாத, கொள்கை வாதிகள் ஆதரவாளர்கள் உள்ள இரண்டு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட மாணவரணி சார்பில் மாணவரணி பணிகளை வீரியப்படுத்த
கிளைகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட பேச்சாளர்கள், அனைத்து கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா இன்ஷாஅல்லாஹ் பிப்ரவரி 27 ல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக
சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த அணைத்து கிளைப் பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment