Sunday, March 13, 2022

கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் _ 13032022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் 13/03/2022 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸில்,

மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,   நடைபெற்றது.








 

இதில் சகோதரர்.  M.R.ஜாவித் அஸ்ரப். B.tech (GOLD MEDALIST), MS (IIT, MADRAS)., அவர்கள் தமிழகஅரசு சார்பாக  நடத்தும்

TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி, விழிப்புணர்வு இல்லாத சமுதாய மக்கள் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற ஆர்வமூட்டி, வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.

 

 

இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் அரசு வேலைவாய்ப்பு பற்றியும், அதைப் பெற ஆர்வமும், சரியான வழிகாட்டுதல்களும் பெற்றதாக கருத்து தெரிவித்தனர்.

 

மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிளை நிர்வாகிகள் தமது பகுதி மக்களுக்கும் இந்த செய்திகளை கொண்டு சேர்த்து வாய்ப்புள்ளவர்கள் பயன்பெற செய்வதாக தெரிவித்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment