Saturday, March 19, 2022

நிர்வாகக் குழுக் கூட்டம்_ 18/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்
18/03/2022 அன்று மாலை 3:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாகக் குழுக் கூட்டம் மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது

இன்ஷாஅல்லாஹ் இன்று 18/03/2022 அன்று   நடைபெறவுள்ள ரமலான் வழிகாட்டுதல் மாவட்ட செயற்குழு சம்பந்தமாக ஆலோசனைகள் செய்து  நிகழ்ச்சி நிரல் மற்றும்  பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

ஹிஜாபிற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாய தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த முடிவுகள் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment