தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக தாராபுரம் கிளை சந்திப்பு 27/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், தாராபுரம் மர்கஸில் நடைபெற்றது.
இதில் கிளை செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
தாராபுரம் கிளை மர்கஸில் மீதமுள்ள கட்டுமாணப் பணிகள், கடன், பொருளாதார விபரங்கள் கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வரிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
ரமலான் மாத செயல்பாடுகள்,
சமுதாயப்பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக தொடர் அநீதிகள், ஹிஜாப் தீர்ப்பு, ஆர்ப்பாட்டம், வழக்கு, பற்றிய விபரங்களுக்கு விளக்கம் வழங்கி, வருங்காலத்தில் அநீதிக்கு எதிராக சமூகத்திற்கு நியாயத்தையும் பாதுகாப்பையும் பெற நமது செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment