Friday, April 01, 2022

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்_01/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 01/04/2022 அன்று மாலை 6:00 மணி முதல் நிர்வாகக் குழுக் கூட்டம்
மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதத்தில்  மாவட்ட மர்கஸ் மற்றும் அனைத்து கிளை மர்கஸ்களில், இரவு தொழுகை நடத்த இமாம், இரவு பயான் தாயிகள் நியமிக்கப்பட்டது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.



மாவட்ட மர்கஸ் பகுதியில் பெண்கள் தாவா குழு உருவாக்குவது என்றும்,

மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தில்,

 இன்ஷாஅல்லாஹ் ரமலானுக்கு பிறகு வரும் கல்வியாண்டில் ஒரு வருட ஆலிமா வகுப்பு, 3 மாத தீனியாத் வகுப்புடன், குடும்ப சூழ்நிலையால்  முழு நேர தினசரிவகுப்பில் கலந்து பயில இயலாத மகளிர்களுக்கு காலை 10:30 முதல் 1:00 மணி வரையிலான சிறப்பு வகுப்பு ஆரம்பம் செய்வது என்றும்,

இந்த வகுப்புகளுக்கான மகளிர் மாணவியர் சேர்க்கைக்கு, நகர கிளை நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தும், 
பெண்கள் தாவா குழு வாயிலாகவும்,
 பிளக்ஸ் நோட்டீஸ்  மூலமாகவும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment