Monday, October 26, 2020

இளைஞர்களுக்கான தர்பியா _ இந்தியன் நகர் கிளை _25102020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக 25/10/2020 அன்று இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.




இதில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் இறைவன் விரும்பும் இளமை பருவம் என்ற தலைப்பிலும்,

சகோதரர்- இத்ரீஸ் அவர்கள் ஹராம்ஹலாலை பேணுவோம் என்ற தலைப்பிலும்,


சகோதரர்- இம்ரான் அவர்கள் களை எடுப்போம் களம் காண்போம் என்ற தலைப்பிலும்,


சகோதரர்- இர்பான் அவர்கள் உள்ளத்தால் மாற்றம் அடைவோம் என்ற தலைப்பிலும்,



உரையாற்றினார்கள்.





இளைஞர்கள் பெண்கள் உட்பட சுமார் 250 நபர்களுக்கு மேல் கலந்து பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

VKP கிளை மதரஸா ஆசிரியர்கள் / மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக  25-10-2020 அன்று VKP  கிளை   மதரஸா ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது 



மக்தப் மதரஸாவை மேம்படுத்துவது சம்பந்தமாக 

மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சகோ. யாஸர் அரபாத் அவர்கள்  மதரஸா ஆசிரியர்களிடம் மதரஸா சம்பந்தமாக கேட்டறிந்து அதனை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் _ VKP 25102020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 2510-2020 அன்று பிறமதத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பள்ளிக்கு வருகை தந்தனர்.



அவர்களுக்கு சகோ.யாஸர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கினார்


அதை தொடர்ந்து வந்திருந்த மூன்று பேரும் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர்.

அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம்,மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, October 24, 2020

இரத்ததானம் அலங்கியம் 23/10/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 23/10/2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்
பெருமாள் கோவில் வலசை சேர்ந்த சகோதரி பொன்னம்மாள் அவர்களின் அவசர சிகிட்சைக்காக,


O+ இரத்தம் 2 யூனிட். சகோதரர் மன்சூர் அலி மற்றும் ரபீக் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, October 21, 2020

இரத்ததானம் - அலங்கியம் 21/10/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 21/10/2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிறமத சகோதரி அவர்களின் அவசர சிகிட்சைக்காக AB+ இரத்தம் ஒரு யூனிட் சகோதரர் அபூ தாஹிர் மூலம் இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் MS நகர் 20102020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 20/10/2020 அன்று பக்ஷரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்




O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர்  மன்சூர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு 20102020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்  ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  தலைமையில்,

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் முன்னிலையில்  20/10/2020 அன்று வடுகன்காளி பாளையம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 



இதில் முதலாவதாக மாவட்ட துணைத்தலைவர் சகோ.யாஸர் அவர்கள் "பொறுப்புகளினால் நாம் பெறும் நன்மைகள் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்

 

அதை தொடர்ந்து  கிளையின் செயல்பாட்டு அறிக்கை  மேலும் வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது

 

அதை தொடர்ந்து  கீழ்க்கண்ட   புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588

கிளை செயலாளர்  - ஆசிப்  - 6383452482

கிளை பொருளாளர்  - பெரோஸ்கான் - 9994740534

கிளை துணை தலைவர்  - அனஸ் - 9944405056

கிளை துணை செயலாளர்  - அப்துல் காதர்  - 9488412430

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

 

Wednesday, October 14, 2020

குமரன் காலனி கிளை சந்திப்பு (பொது மசூரா) 14/10/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக குமரன் காலனி  கிளை சந்திப்பு  (பொது மசூரா) 14/10/2020 அன்று  மாவட்ட பொருப்பாளர். ஜாகிர் தலைமையில்  நடைபெற்றது.


 

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி

கிளை நிர்வாகம் சார்பில் இன்ஷாஅல்லாஹ் 

வாரம் ஒரு தெருமுனை பிரச்சாரம்,

மாதம் இரு பெண்கள் பயான்

மற்றும் ஆதரவாளர்களைஉறுப்பினர்களாக இணைப்பது  

உள்ளிட்ட  வருங்கால தாவா திட்டங்களை  நடைமுறைப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, October 12, 2020

கோம்பைதோட்டம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 11 10 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கோம்பைதோட்டம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 11 10 2020 அன்று கோம்பைதோட்டம் திருப்பூர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. 

 


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் ரபீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்,  இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்ற இரத்ததான முகாம் குறித்தும்,  பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, October 11, 2020

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 10 10 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 10 10 2020 அன்று அனுப்பர்பாளையம் மர்கஸில் நடைபெற்றது.

 


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் சித்தீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த  பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

 

Saturday, October 10, 2020

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/10/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 09/10/2020 வெள்ளிக்கிழமை   மாலை  5:30  மணி  முதல்   மாவட்ட   அலுவலகத்தில்  மாவட்ட  தலைவர்  நூர்தீன்   தலைமையில், 




மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட  பொருளாளர்   அப்துல்ரஹ்மான்,   மாவட்ட  துணைத் தலைவர்  யாசர் அரபாத்,   துணைச் செயலாளர்கள்   சேக் பரீத்,  அப்துர்ரஷீத்,  ரபீக், 

மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி , மற்றும் மாவட்ட  வர்த்தகரணி  செயலாளர்   ஜாகிர்    ஆகியோர்   கலந்து கொண்டு  நடைபெற்றது

கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள்  பற்றியும்   விரிவாக   தகவல்   பரிமாறப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் இயங்கும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தின் தேவைகளை பற்றி ஆலோசித்து,  உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது.

தேனி மாவட்ட மர்கஸ் பணிகளுக்கு இந்தமாத மூன்றாம் வார (16/10/2020 ) ஜும்ஆ வசூல் செய்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள்   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, October 06, 2020

பெரிய தோட்டம் கிளை பொது மசூரா 5 10 2020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 5.10.2020 அன்று இஷா தொழுகைக்கு பின் பொது மசூரா நடைபெற்றது



இதில் கிளை புதிய பொறுப்பாளரான மாவட்ட துணைசெயலாளர் ரபீக் அவர்கள் நிர்வாகிகளுக்கு அறிமுகம், அறிவுரை, தாவா பணிகள் வீரியமாக செய்ய ஆலோசனைகள் மற்றும் கிளையின் நிறை குறைகளை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, October 05, 2020

உடுமலை நகரம்& சாதிக் நகர் கிளைகளின் பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 5 10 2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம்& சாதிக் நகர் கிளைகளின்  பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 5 10 2020 அன்று உடுமலை கிளை மர்கஸில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் அப்துல் ரஷீத்  அவர்கள் தாவா பணிகளின் அவசியமும், கடமையும் எனும் தலைப்பில் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

 

கிளை நிர்வாகம் சார்பில் இன்ஷாஅல்லாஹ் 

வாரம் ஒரு பெண்கள் பயான்,

மாதம் ஒரு பொது ஆலோசனை கூட்டம்,

மாதம் ஒரு தர்பியா

மாதம் ஒரு மதரசா பரிசளிப்புபெற்றோர்சந்திப்பு

மாதம் ஒரு எளிய மார்க்கம் அல்லது இனிய மார்க்கம்

குழு தாவா மூலம் மக்களை அழைப்பது

ஆதரவாளர்களை உறுப்பினர்களாக இணைப்பது 

உள்ளிட்ட  வருங்கால தாவா திட்டங்களை   நடைமுறைப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் இன்று ...

 திருப்பூர் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி கீழ் தளத்தில் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் இயங்கி வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய மார்க்கத்தை தூய வடிவில் அறிந்து இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயண்படும் மார்க்க கல்வியை வழங்கும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்
இன்று ...



ஆலிமா வகுப்பு



தீனியாத் வகுப்பு

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் மென்மேலும் வளர்ச்சியடைந்து கல்விச்சேவையில் சிறந்து விளங்க உங்கள் பிரார்த்தனைகளையும், ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறோம்.

: அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம், திருப்பூர்.
தொடர்புக்கு: 7094465552, 6369634750

Sunday, October 04, 2020

படையப்பா நகர் கிளை பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 4 10 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளை பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 4 10 2020 அன்று படையப்பா நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் சித்தீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, September 27, 2020

மாணவரணி தர்பியா 27092020






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 27:09:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவர்களுக்கான
  விழிப்புணர்வு நிகழ்ச்சி (மாணவரணி தர்பியா) நடைபெற்றது.



இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பிலும்





சகோ.அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "இஸ்லாமிய இளைஞர்கள்" எனும் தலைப்பிலும்,




 சகோ.இம்ரான் அவர்கள்   "கல்வியின் அவசியமும், இளைஞர்கள் செல்ல வேண்டிய பாதையும்" எனும் தலைப்பிலும் 

மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உரை நிகழ்த்தி  பயிற்சிகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.


கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு 27092020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர்  ஹனிபா அவர்கள்  தலைமையில்

 


மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர்  இம்ரான் அவர்கள் முன்னிலையில்  27/09/2020 அன்று கோம்பைத்தோட்டம் மாவட்ட மர்கஸ் கீழ் தளத்தில்  நடைபெற்றது.


கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது. 

 

தலைவர்: பாபு  9043832610

செயலாளர்: அப்துல்லாஹ் MISc., 8056553059

பொருலாளர்: சையது 8122936621

துணைத்தலைவர் : சித்தீக் 9791972987

து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355

மருத்துவணி : அன்சாரி 9677507500

மாணவரணி : அனீபா 9344318811

தொண்டரணி: வஹாப்  7010608060


தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

மாணவரணி சார்பில் செயல்படுத்த வேண்டிய தாவா சமுதாய சேவைப்பணிகள் பற்றி மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 04/09/2020 அன்று நடத்தவுள்ள இரத்ததான முகாம் பற்றி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ் அவர்கள்  ஆலோசனைகள் வழங்கியும்

கிளை பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்


S v. காலனி கிளை தர்பியா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 27/09/2020 அன்று கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 


 

மாவட்ட மாணவரணி செயலாளர். சகோ.இம்ரான் அவர்கள் இஸ்லாத்தில் மாணவர்களின் பங்களிப்பு  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்