Sunday, November 22, 2020

#இலக்கை_நோக்கி_இளைஞனே_வா! திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்  #இலக்கை_நோக்கி_இளைஞனே_வா! தொடர் பிரச்சார 

திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

 கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில்


மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் 

 22/11/2020 ஞாயிற்றுக் கிழமை அன்று  காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது 


மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் அவர்கள்  கொள்கை உறவும்,சத்திய பிரச்சாரமும் எனும் தலைப்பிலும்,


மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் இலக்கை நோக்கிஇளைஞனே வா நோக்கமும் செயல் திட்டங்களும் எனும் தலைப்பிலும்,


மாவட்டத் துணைச் செயலாளர்  அப்துல் ரஷீத் அவர்கள் கிளைகள் தோறும் தாயிகள் பயிற்சி வகுப்பின் அவசியமும், வழிகாட்டுதலும் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்து 

கொரானா பேரிடர் காலத்திலும் சிறப்பாக தாவா பணிகள், சமுதாய சேவைப்பணிகள் மற்றும் நிர்வாக பணிகளில் சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.















தொடரந்து

மாவட்ட பொருளாளர், அப்துல் ரஹ்மான் அவர்கள் புத்தக தாவா, காலண்டர் தாவா,   இணையதள பதிவு, வங்கி கணக்கு மற்றும் வரவு செலவு தாக்கல் செய்வதன் அவசியங்களை விளக்கினார்.


மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் திருமண பதிவில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை விளக்கமாக எடுத்துரைத்தார்.


மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள்  உறுப்பினர் பதிவு விபரங்களையும், முழுநிர்வாகம் இல்லாத கிளைகளில் பொதுக்குழு நடத்தவும் விளக்கம் வழங்கினார்கள்.


மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத் அவர்கள்  மர்கஸ் இமாம்களின் அவசியமும் அவர்களை பயண்படுத்த வழிகாட்டுதல்களையும் எடுத்துரைத்தார்.


இதில்   மாவட்டத் துணைச் செயலாளர்கள்  ஷேக் பரீத், ரபீக், ஹனிபா, சித்திக், மற்றும் அணிச் செயலாளர்கள் ஜெய்லானி, ஜாகிர், அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாவட்டத் துணைச் செயலாளர் சித்தீக் அவர்கள் நன்றியுரையுடன் செயல்வீரர்கள் கூட்டம் மதியம் 1:00 மணிக்கு நிறைவுபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்

Friday, November 20, 2020

RP கிளை சந்திப்பு


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  RP நகர் கிளை சந்திப்பு   (பொது மசூரா) 20/11/2020  அன்று RP நகர் கிளை  மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ்  தலைமையில் நடைபெற்றது. 

 

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Thursday, November 19, 2020

இரத்ததானம் _திருப்பூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 19/11/2020 அன்று சகோதரி பூர்ணிமா அவர்களின் பிரசவ அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் B+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் யாசர் அரபாத் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

#இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவதே

Monday, November 16, 2020

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் _சாதிக்நகர் கிளை



         

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சாதிக்நகர் கிளை சார்பாக 15-11-20 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி உடுமலை  மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  நடைபெற்றது.







சகோ, அப்துர்ரஹ்மான்.MISc., அவர்கள் இஸ்லாமிய மார்க்க சந்தேக கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.





 

இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து மார்க்க விளக்கம் பெற்றனர்.  

அல்ஹம்துலில்லாஹ்


மார்க்க விளக்க *தர்பியா* & மதரஸா மாணவர்களின் மார்க்க நிகழ்ச்சி _செரங்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், *செரங்காடு கிளை* சார்பாக 15/11/2020 அன்று மார்க்க விளக்க *தர்பியா* மற்றும் மதரஸா மாணவர்களின் மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



*அல்ஹம்துலில்லாஹ்*
இதில் சகோதரர் *அம்மார் Misc* அவர்கள் *தொழுகையின் ஒழுங்குகள்* என்ற தலைப்பிலும்,



சகோதரர் *அப்துர் ரஹ்மான் Misc* அவர்கள் *மார்க்க பணிகளும் மகத்தான கூலியும்* என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.



இந்நிகழ்ச்சி யில் மதரஸா மாணவர்களின் *கிராஅத்* *பயான்* நடைபெற்றது.




நிகழ்ச்சியின் முடிவில், மதரஸாவில் நடைபெற்று முடிந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.



இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
*அல்ஹம்துலில்லாஹ்*

கல்வி உதவித்தொகை முகாம் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 15:11:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளியில்


*சிறுபான்மை மாணவ மாணவிகளுக்காக கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்* நடைபெற்றது.


இதில் ஏராளமானவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பித்து தரப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, November 14, 2020

நல்லொழுக்க_சிறப்புவகுப்பு _அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தில் 13/11/2020 அன்று மாலை நல்லொழுக்க சிறப்பு வகுப்பு நடைபெற்றது.



இதில் சகோ சபீர் அலி அவர்கள் பெண்களுக்கான நல்லொழுக்க அறிவுரையாக இறைஅச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும், மார்க்க அறிவையும் வளர்ப்பதாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, November 04, 2020

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக பெற்றோர் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் பயிலும் மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி 4.11.2020 புதன்கிழமை காலை 11:00 முதல் 12:30 வரை நடைபெற்றது.

 


கல்லூரி முதல்வர் சகோ M.I.சுலைமான் அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றியும், மாணவிகளின் கல்வி தரம் மற்றும் பெற்றோர் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.

 

மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்களும், கல்வியக பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்களும் கலந்து கொண்டு நிர்வாக ரீதியான கருத்துக்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

 

  இதில் ஆர்வமாக பல மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு, மாணவிகளின் கல்வி மேம்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும், கல்லூரி சம்பந்தமான பல்வேறு ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.


 

பின்னர் பேச்சுப்பயிற்சி வகுப்பில்  சிறப்பான முறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவியர்களுக்கு பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.

 

தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், கல்வியக ஆசிரியர்கள் சந்திப்பு நடத்தி குறை நிறைகளை கேட்டறிந்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

மதரஸா_ பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்
கிளை சார்பாக நடைபெறும் ஆண்கள் மதரஸா, மற்றும் பெண்கள் மதரஸாக்களில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி

1.11.2020 ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகை பின் நடைபெற்றது.

இதில் முதலாவதாக மாணவ மாணவிகள் கிராத் ஒத்தினார்கள்.
பின்னர் கேள்வி பதில் போட்டி நடைபெற்றது





சகோ இம்ரான் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும்,


சகோதரி ரீஸ்மா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


பின்னர் மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள்
மாணவிகள் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் அதிகமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மதரஸா மேம்பாடு சம்பந்தமான கருத்துக்கள், ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் சிறப்பான முறையில் கல்வித்திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, November 02, 2020

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  2/11/20 திங்கட்கிழமை அன்று    பத்மாவதி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு  சகோதரர் அபுத்தாஹிர் அவர்களின்   B+ இரத்தம் ஒரு யூனிட்.இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, October 26, 2020

கோவை மண்டல செயற்குழு 25.10.2020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தின் சார்பில் கோவை மண்டல செயற்குழு 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.


இதில் மாநில செயலாளர். சகோ. E.பாரூக், கோ. காஞ்சி இப்ராஹிம், மற்றும் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
ஜமாஅத்தின் சேவை அமைப்புகள் முதியோர் இல்லம், சிறுவர் இல்லங்கள் , ஆண்கள் பெண்கள் தாவா சென்டர்கள், MISc., இஸ்லாமிய கல்லூரி மற்றும் ஹிப்ளு மதரசா    செயல்பாடுகள் பற்றியும், 
அதற்க்கான உண்டியல் வசூல் பங்களிப்பு பற்றியும் மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு பற்றியும் ஆர்வமூட்டினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

இளைஞர்களுக்கான தர்பியா _ இந்தியன் நகர் கிளை _25102020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக 25/10/2020 அன்று இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.




இதில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் இறைவன் விரும்பும் இளமை பருவம் என்ற தலைப்பிலும்,

சகோதரர்- இத்ரீஸ் அவர்கள் ஹராம்ஹலாலை பேணுவோம் என்ற தலைப்பிலும்,


சகோதரர்- இம்ரான் அவர்கள் களை எடுப்போம் களம் காண்போம் என்ற தலைப்பிலும்,


சகோதரர்- இர்பான் அவர்கள் உள்ளத்தால் மாற்றம் அடைவோம் என்ற தலைப்பிலும்,



உரையாற்றினார்கள்.





இளைஞர்கள் பெண்கள் உட்பட சுமார் 250 நபர்களுக்கு மேல் கலந்து பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

VKP கிளை மதரஸா ஆசிரியர்கள் / மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக  25-10-2020 அன்று VKP  கிளை   மதரஸா ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது 



மக்தப் மதரஸாவை மேம்படுத்துவது சம்பந்தமாக 

மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சகோ. யாஸர் அரபாத் அவர்கள்  மதரஸா ஆசிரியர்களிடம் மதரஸா சம்பந்தமாக கேட்டறிந்து அதனை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் _ VKP 25102020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 2510-2020 அன்று பிறமதத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பள்ளிக்கு வருகை தந்தனர்.



அவர்களுக்கு சகோ.யாஸர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கினார்


அதை தொடர்ந்து வந்திருந்த மூன்று பேரும் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர்.

அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம்,மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, October 24, 2020

இரத்ததானம் அலங்கியம் 23/10/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 23/10/2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்
பெருமாள் கோவில் வலசை சேர்ந்த சகோதரி பொன்னம்மாள் அவர்களின் அவசர சிகிட்சைக்காக,


O+ இரத்தம் 2 யூனிட். சகோதரர் மன்சூர் அலி மற்றும் ரபீக் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, October 21, 2020

இரத்ததானம் - அலங்கியம் 21/10/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 21/10/2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிறமத சகோதரி அவர்களின் அவசர சிகிட்சைக்காக AB+ இரத்தம் ஒரு யூனிட் சகோதரர் அபூ தாஹிர் மூலம் இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் MS நகர் 20102020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 20/10/2020 அன்று பக்ஷரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்




O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர்  மன்சூர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு 20102020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்  ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  தலைமையில்,

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் முன்னிலையில்  20/10/2020 அன்று வடுகன்காளி பாளையம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 



இதில் முதலாவதாக மாவட்ட துணைத்தலைவர் சகோ.யாஸர் அவர்கள் "பொறுப்புகளினால் நாம் பெறும் நன்மைகள் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்

 

அதை தொடர்ந்து  கிளையின் செயல்பாட்டு அறிக்கை  மேலும் வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது

 

அதை தொடர்ந்து  கீழ்க்கண்ட   புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588

கிளை செயலாளர்  - ஆசிப்  - 6383452482

கிளை பொருளாளர்  - பெரோஸ்கான் - 9994740534

கிளை துணை தலைவர்  - அனஸ் - 9944405056

கிளை துணை செயலாளர்  - அப்துல் காதர்  - 9488412430

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்