Tuesday, December 29, 2020

பொது ஆலோசனைக் கூட்டம் - VKP

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  28/12/2020 அன்று இஷா விற்கு பின்  VKP கிளை மர்கஸில்  மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின்   ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்  




             மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்  மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்,  மாவட்ட துணை செயலாளர் ரபீக் ஆகியோர் முன்னிலையில்    நடைபெற்றது.


இதில் வடுகன்காளிபாளையம், மங்கலம், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், R.Pநகர் ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


VKP கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 10/01/2021அன்று நடத்தவுள்ள இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி யின்  அவசியம் பற்றியும்



மங்கலம் பகுதி கிளைகளின் பங்களிப்பு பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


கலந்து கொண்ட கிளை சகோதரர்கள் இனிய மார்க்கம் நிகழ்ச்சி  பெரும் வெற்றி அடையும் வகையில்,   உத்வேகமாக பணிகளை செய்து

மங்கலம் பகுதியில் சமூக நல்லிணக்கம் உருவாகும் வகையில் பணிகளை அமைத்து, பொதுமக்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பிறமத மக்களை திரட்ட  உறுதி வழங்கினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, December 28, 2020

குடும்பவியல் தர்பியா - சின்னவர்தோட்டம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *சின்னவர்தோட்டம் கிளை சார்பில்  இலக்கை நோக்கி இளைஞனே வா செயல்திட்டத்தை  முன்னிட்டு   27/12/20 இன்று  குடும்பவியல் தர்பியா  நடைபெற்றது 



இதில் முதலாவதாக சகோ யாசர் அராபத் அவர்கள் ஆதரிக்கும் பிள்ளைகள் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 

இரண்டாவதாக சகோ தவ்பிக்  அவர்கள் அரவனைக்கும் பெற்றோர்கள் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்


மூன்றாவதாக சகோ MI சுலைமான் அவர்கள் குடும்பமாக தாவா செய்வோம்  என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்

நான்காவதாக சகோ அபூபக்கர் சித்தீக் அவர்கள் அன்பு மனைவி அருமை கணவர் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்

ஐந்தாவதாக சகோ இர்பான் அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா  என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 

500 மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

இலக்கு - குறும் படம் -கோம்பைத் தோட்டம் பரிசளிப்பு

 


இலக்கு இளைஞர்கள், பெற்றோருக்கான விழிப்புணர்வு குறும் படம் 

 கோம்பைத் தோட்டம்  கிளை மதரசா மாணவர்களின் குறும்படம் 


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 27/12/20 அன்று நடைபெற்ற மதரஸா நிகழ்ச்சியில் இலக்கு குறும்படம் வெளியிடப்பட்டு, 

அதன்  உருவாக்கத்தில் பங்கேற்ற சகோதரர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது 







  அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூரில் வேளான் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட TV & பத்திரிகை செய்திகள்


மக்கள் விரோத மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான புதிய *வேளாண் சட்டம் 2020 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 25/12/2020 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி திருப்பூர் *மங்கலம் நால்ரோடு* பகுதியில் நடைபெற்றது.

*கண்டன உரை* மாநிலச் செயலாளர் சகோதரர் *செங்கோட்டை பைசல்* அவர்கள்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விவசாய திருத்த சட்டம் 2020 ஐ திரும்பப்பெறு எனும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இலக்கை நோக்கி இளைஞனே வா! _ S.V. காலனி கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 27/12/2020 அன்று மாலை 5:30முதல் 9:30 வரை 

இலக்கை நோக்கி இளைஞனே வா! 

எனும் தலைப்பில்  தர்பியா நிகழ்ச்சி 
திருப்பூர் S.V. காலனி JJ மகாலில் நடைபெற்றது  


இதில் மாவட்ட துணைசெயலாளர் சகோதரர். சித்தீக் அவர்கள் தலைமையில்

ஆரம்பமாக மதரசா மாணவ மாணவிகளின் பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.




தொடர்ந்து சகோதரர். இம்ரான் அவர்கள் பெற்றோர்களின் பொறுப்பு எனும் தலைப்பிலும்,

சகோதரர். அப்துல் சமது M.I.Sc., அவர்கள்   இன்றைய   இளைஞர்கள், இளம்பெண்களின் நிலை எனும் தலைப்பிலும்  உரை நிகழ்த்தி நல்லொழுக்க பயிற்சி வழங்கினார்கள்.

தொடர்ந்து மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்


அவசர இரத்ததானம்- திருப்பூர் மாவட்டம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 25/12/2020  அன்று திருப்பூர் பகுதி சார்ந்த   சகோதரியின் அவர்களுக்கு அவசர சிகிச்சைக்காக   அரசு மருத்துவமனையில் B+tve  ஒரு யூனிட் இரத்தம் 


சகோதரர்  விஜய் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 26, 2020

வேளாண் சட்டம் 2020 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 
மக்கள் விரோத மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான புதிய *வேளாண் சட்டம் 2020 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 25/12/2020 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி திருப்பூர் *மங்கலம் நால்ரோடு* பகுதியில் நடைபெற்றது.


*கண்டன உரை* மாநிலச் செயலாளர் சகோதரர் *செங்கோட்டை பைசல்* அவர்கள்




ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விவசாய திருத்த சட்டம் 2020 ஐ திரும்பப்பெறு எனும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

Tuesday, December 22, 2020

பொது ஆலோசனைக் கூட்டம் - மங்கலம்

              தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  21/12/2020 அன்று இஷா விற்கு பின்   மங்கலம் கிளை மர்கஸில்  மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின்   ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்  



              மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில்  மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்  ஆகியோர் முன்னிலையில்    நடைபெற்றது.



இதில் மங்கலம், வடுகன்காளிபாளையம், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், R.Pநகர் ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


மங்கலம் கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 25/12/2020 அன்று நடத்தவுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தின்  அவசியம் பற்றியும், 

மங்கலம் பகுதி கிளைகளின் பங்களிப்பு பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட கிளை சகோதரர்கள் ஆர்ப்பாட்டம்  பெரும் வெற்றி அடையும் வகையில்,  உத்வேகமாக ஆர்ப்பாட்ட பணிகளை செய்து, 

மங்கலம் பகுதியில் சமூக நல்லிணக்கம் உருவாகும் வகையில் பணிகளை அமைத்து, பொதுமக்களின் நன்மதிப்பை பெரும் வகையில் நீதிக்கு போராட மக்களை திரட்ட  உறுதி வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

Sunday, December 20, 2020

படையப்பா நகர் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர்  சித்தீக் அவர்கள் தலைமையில் 20/12/2020 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.

 



கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது. 

தலைவர் :  சம்சுதீன் 8778648691 

செயலாளர்: முஹம்மது ரபீக் 9361469802

பொருளாளர் : அப்துல் சமது 9952312152

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்

 

Saturday, December 19, 2020

ஹவுசிங் யூனிட் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர்  சேக் பரீத் அவர்கள் தலைமையில் 19/12/2020 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை நிர்வாகிகளுக்கு பணிகளை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது. 



தலைவர்: ரியாஜுதீன் 9042651553 

செயலாளர்: மைதீன் 9715152537

பொருளாளர்: முஹம்மது ரபீக் 9243870071

துணைத்தலைவர் : ஜமால்தீன்

துணைசெயலாளர் : மன்சூர்

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 15, 2020

மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  14/12/2020 அன்று இஷா விற்கு பின் சின்னவர்தோட்டம் கிளை மர்கஸில்  மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின்   ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்    மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 



இதில் மாவட்ட துணைத்தலைவர் 
யாசர் அராபத் அவர்களும், 1 மங்கலம்கிளை  2- வடுகன் காளிபாளையம்  கிளை , 3- இந்தியன் நகர் கிளை 4- RP நகர் கிளை 5- சின்னவர்தோட்டம் கிளை  ஆகிய ஐந்து கிளை   நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


கிளைகளின்  பணிகள் குறித்து கேட்டறிந்து, கிளை  பணிகளை மேம்படுத்துவது குறித்தும் 



வருங்கால தாவா பணிகளை அதிகப்படுத்துதல் மற்றும்  சமுதாய சமூக சேவைப்பணிகள் அதிகப்படுத்துதல் பற்றி  பல்வேறு ஆலோசனைகளை  வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

Monday, December 14, 2020

அவசர இரத்த தானம் -செரங்காடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக   14/12/2020 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் வனிதா நாயக் என்ற வடமாநில சகோதரியின் மகப்பேறு சிகிச்சைக்காக 


சகோதரர் Sony ரஃபீக் மற்றும் சகோதரர் அருண் குமார்  ஆகியோர்  O +v  இரத்தம் 2 unit வழங்கினார்கள் .

அல்ஹம்துலில்லாஹ்...