Saturday, January 11, 2020

மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் -உடுமலை 10/01/2020



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை போராடுவோம் எனும்
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..









கண்டன உரை : ஜமால் உஸ்மானி




10/01/2020 வெள்ளி மாலை 4:30 முதல் 6:30 மணி வரை  உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.




ஏராளமான பொதுமக்கள் நியாயமான இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.




அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 10012020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில்,
10/01/2020 இரவு 7:30 முதல் உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.


இன்று உடுமலை கிளை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் பற்றி கலந்தாலோனை செய்யப்பட்டது.


இன்ஷாஅல்லாஹ் 13/01/2020 அன்று
மாவட்ட நிர்வாகம் சார்பில், நடத்தப்படவுள்ள
அவசர செயல்வீரர்கள் கூட்டம் பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு நிகழ்ச்சிநிரல் முடிவு செய்யப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 25 ல் நடத்தப்படவுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கிய பேரணிக்காக பணிகள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

Friday, January 10, 2020

மங்கலம் கிளை நிர்வாக சந்திப்பு 09/01/2020













தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/01/2020 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில், மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மங்கலம்  கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

கிளை நிர்வாகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது.


குடியுரிமை திருத்த சட்ட பாதிப்பு பற்றி கிளை சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதற்கான ஆலோசனைகள், நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சின்னவர் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு 09/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக,09/01/2020 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில், மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் சின்னவர் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
கிளை நிர்வாகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது.


கிளை சார்பில் 26/01/2020 அன்று நடத்தப்படவுள்ள இரத்தபிரிவு கண்டறியும் முகாம் பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும்

இன்ஷாஅல்லாஹ் 10/01/2020 அன்று உடுமலையில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்ட பாதிப்புகளை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி அமைக்க பூர்வாங்க ஆலோசனைகள் செய்யப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணிக்காக, மாவட்ட செயற்குழு நடத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.
கிளைகளின் தாவா பணிகள், செயல்பாடுகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, January 06, 2020

மாநில செயற்குழு 5.12.2019





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு 5.12.2019 ஞாயிற்றுக்கிழமை
கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இதில் மாநில நிர்வாகிகள் உரை நிகழ்த்தினார்.









குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 25 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் மாவட்ட ஆட்சியர் நோக்கி முஸ்லிம்கள் பேரணி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.








இதில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




அல்ஹம்துலில்லாஹ்

Saturday, January 04, 2020

நபிவழியில் ஜும்ஆ - அனுப்பர்பாளையம் கிளை




திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் கிளையின் சார்பாக 03/01/2020 அன்று நபிவழியில்  ஜும்ஆ தொழுகை  ஆரம்பம் செய்யப்பட்டது
 இதில்சகோ.ஷேக்பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, January 01, 2020

M.S.நகர் கிளை சந்திப்பு 01012020




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 01.01.2020 அன்று காலைM.S.நகர் கிளை சந்திப்பு  கிளை  மர்கஸில், கிளை பொறுப்பாளர் மாவட்ட   துணைச்செயலாளர் ரபீக் அவர்கள்  தலைமையில், மாவட்டதுணைத்தலைவர் யாசர் அரபாத் முன்னிலையில்    நடைபெற்றது.

இதில்  சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு கிளை சார்பில் செய்த பணிகள் பற்றியும்,  கிளையில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றியும் குறை நிறைகள் கேட்டறியப்பட்டு, ஆலோசனைகள் வழங்கி,

இனி செய்ய வேண்டிய தாவா பணிகள், நிர்வாகப் பணிகளைப் சிறப்பாக செய்வதற்க்கான  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், ஆர்வமுடன்  கருத்துக்களை பரிமாறி வருங்கால பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

பெரியகடைவீதி கிளை நிர்வாக சந்திப்பு 31/12/2019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 31.12.2019 அன்று,   மாவட்ட மர்கஸில்   மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்   பெரியகடைவீதி கிளை  நிர்வாக சந்திப்பு   நடைபெற்றது.

பெரிய கடை வீதி மர்கஸ் இட உரிமையாளர் கொடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதால், உரிமையாளருக்கு நன்றி சொல்லி  மர்கஸில் நாம் ஏற்படுத்திய கட்டுமானங்களை திரும்ப எடுத்துக்கொள்வது என்றும்,

பெரியகடைவீதி மர்கஸ் கட்டுமானப் பொருள்களை  கணக்கம்பாளையம் தற்காலிக மர்கஸ் கட்டுமானத்திற்கு பயன்படுத்தவும்  முடிவு செய்யப்பட்டது,  எனும் மாவட்ட நிர்வாக ஆலோசனை முடிவுகளை சொல்லி, 


இனி வருங்கால செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.


இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெரிய கடை வீதி    கிளை   நிர்வாகிகள்   கலந்து   கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர நிர்வாககுழுக் கூட்டம் 31122019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 31/12/2019 அன்று இரவு 7:00 மணி முதல்,  நிர்வாககுழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

டிசம்பர் 28 அன்று சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு திருப்பூர் மாவட்டம் சார்பில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதையும், 


அதில் நிகழ்ந்த  குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.





பெரிய கடை வீதி மர்கஸ் இட உரிமையாளர் கொடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதால், உரிமையாளருக்கு நன்றி சொல்லி  மர்கஸில் நாம் ஏற்படுத்திய கட்டுமானங்களை திரும்ப எடுத்துக்கொள்வது என்றும்,

பெரியகடைவீதி மர்கஸ் கட்டுமானப் பொருள்களை  கணக்கம்பாளையம் தற்காலிக மர்கஸ் கட்டுமானத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் பணிகள் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை செய்து, கிளை சந்திப்புக்களை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரியில் இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 5ல்   நடக்கவுள்ள  மாநில செயற்குழுவில்   அணைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, December 29, 2019

கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி - திருப்பூர்



இந்தியர்களை மதரீதியாக பிரிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி யை அறிவித்து 28/12/2019 அன்று மிக பிரமாண்டமான இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன்  நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்




இந்த கோரிக்கை பேரணியில் திருப்பூர் மாவட்டம் சார்பில்  பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர்  பெருந்திரளாக கலந்து கொண்டனர். 






























இந்த நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட நமது மாவட்ட கிளை மக்கள் விபரம்

மக்களுக்கு,  மாவட்ட நிர்வாகம் சார்பில் மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.

Thursday, December 26, 2019

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 25122019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 25/12/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.




















மதரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும்
*குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி...*


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக *மாநிலம் தழுவிய அளவில்* இன்ஷாஅல்லாஹ் *டிசம்பர் 28* அன்று சென்னை *கவர்னர் மாளிகை நோக்கி பேரணி* நடத்தவுள்ளதற்காக

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்து பணிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.



மாவட்ட நிர்வாகம் சார்பில் பயண துஆ, பயண வழிகாட்டல், டோல் கடிதம், மருந்துகள், மதிய உணவு தயார் செய்து வழங்கவும், முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, December 24, 2019

ஆலோசனைகூட்டம் _ உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 24.12.19 அன்று, உடுமலை  கிளை   ஆலோசனைகூட்டம்   கிளை மர்கஸில், மாவட்ட  பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள்  தலைமையில்   நடைபெற்றது.





இதில் முஸ்லிம்களை அகதிகளாக்கும் அநியாய குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி இன்ஷாஅல்லாஹ் வரும் 28/12/2019 அன்று நடைபெறவுள்ள சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு செய்துள்ள பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், மற்றும் கிளை சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து  கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.



உடனடியாக சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு சென்று இமாம்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேரணிக்கு  அழைப்பு கொடுக்கப்பட்டது. 
 
அல்ஹம்துலில்லாஹ்.