Saturday, May 09, 2020
Friday, May 08, 2020
அவசர இரத்ததானம் 07052020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 7/05/2020 அன்றுதிருப்பூர் பகுதி சேர்ந்த நஸ்ரின் பானு என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில்
O+tve இரத்தம் ஒரு யுனிட் சகோதரர் , சுரேஸ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Friday, May 01, 2020
கோவிட்-19 நிவாரண உதவிகள்
கோவிட்-19 காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட 6616 குடும்பங்களுக்கு பலகட்டமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 25/04/2020 வரை
ரூ.36,47,546.00/- மதிப்பிலான நிவாரண உதவிகள் பணமாகவும், அரிசி, மளிகை, பால் மருந்து மற்றும் காய்கறி பொருட்களாகவும் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் .வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்..
தொடர்ந்து இந்த ரமலானிலும் பல்வேறு உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்வாகிகள் வழங்கி வருகிறார்கள்.
இதற்காக பொருளாதாரத்தை வாரி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,
இதற்காக உழைத்த கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும்..
அல்லாஹ் அருள் புரிவானாக...
ஜஸாக்கல்லாஹு ஹைரா...
Saturday, April 11, 2020
ஊரடங்கு அவசர கால நிவாரண உதவி - திருப்பூர்
#வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-4-2020 அன்று வடுகன்காளிபாளையம் மஹமூதா நகர் மற்றும் கடைவீதி, ஈத்ஹா நகர் ,வெள்ளெஞ்செட்டிபாளையம் மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள *5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு 10 நாட்களுக்கு இலவச பால் விநியோகம்* செய்யக்கூடிய வகையில் (இரண்டாவது நாள்) இன்றைய தினம் காலை 7 மணியளவில் இறைவனுடைய அருளால் மொத்தம் *130 வீடுகளுக்கு 1/2 லிட்டர் பால்* வீதம் மொத்தம் *65லிட்டர் பால் வீடு வீடாக சென்று விநியோகம்* செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Friday, April 10, 2020
ஊரடங்கு அவசர கால நிவாரண உதவி - திருப்பூர்
#காய்கறிகள் இலவச விநியோகம்
#வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-4-2020 அன்று கொரோனா பாதிப்பால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் கஷ்டப்படும் வடுகன்காளிபாளையம் பகுதியில் வசிக்கும் 340 குடும்பங்களுக்கு காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, March 15, 2020
திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 13/03/2020
CAA, NPR, NRC ஐ அரசாங்கம் திரும்ப பெறும் வரை தொடர் போராட்டத்தின் ஒன்றாக,
மாநில நிர்வாகம் அறிவித்த சிறை நிரப்பும் போராட்டத்தை
இன்ஷாஅல்லாஹ் வரும் மார்ச் 18 அன்று காலை 11:00 மணிக்கு, திருப்பூர் மாவட்ட சிறை முன்பு நடத்த,
*திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்*
13/03/2020 அன்று *வெள்ளிக்கிழமை மாலை 7:30 மணி முதல் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
நமது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக நாம் நடத்தவுள்ள போராட்டத்தை எப்படி நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்கான அவசியமான செயல்வீரர்கள் கூட்டத்தில்,
மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாம் என்றாலே கட்டுப்படுதல்" எனும் தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.
அனைத்து கிளைகளிலிருந்தும் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டனர்.
மாவட்ட மாணவரணி செயலாளர் நன்றியுரையுடன் செயல்வீரர்கள் கூட்டம் நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, March 14, 2020
திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/03/2020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/03/2020 வெள்ளிகிழமை அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
CAA, NRC, NPR கருப்பு சட்டங்களை நடைமுறை படுத்தக் கூடாது எனும் கோரிக்கையை முன்னிறுத்தி மாநில தலைமை
அறிவித்த
சிறை நிரப்பும்
போராட்டத்திற்கான மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் என்னென்ன தகவல்கள்
கருத்துக்களை சொல்வது என்றும்,
சிறை நிரப்பும்
போராட்டத்தை சிறந்த முறையில் நடத்த என்னென்ன செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள்
செயல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Friday, March 13, 2020
கோம்பைத்தோட்டம் கிளை செயற்குழு கூட்டம் 12/03/2020
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை செயற்குழு கூட்டம் மாவட்ட
துணைச்செயலாளர் சேக் பரீத் தலைமையில் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில் 12/03/2020 அன்று கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மர்கஸில் நடைபெற்றது.
முதலாவதாக *அழைப்புப்
பணியின் அவசியம்* எனும் தலைப்பில் மாவட்ட் பேச்சாளர் பசீர்அலி அவர்கள் மார்க்க சிந்தனையுடன் நிகழ்ச்சி
துவங்கப்பட்டது.
அடுத்து சிறப்பாக
தாவா மற்றும் சமுதாய பணிகளை செய்வதற்கு, நிர்வாக சீரமைப்பு தேவை என
கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.
தலைவர்: பாபு 90438 32610
செயலாளர்: அப்துல்லாஹ் MISc., 80565 53059
பொருலாளர்: ஷாஜகான் 90429 79014
துணைத்தலைவர் : சையது 81229
36621
து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355
மருத்துவணி : அன்சாரி 9677507500
மாணவரணி : அனீபா
93443 18811
அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இனி வருங்காலத்தில் தாவா பணிகளை வீரியமாக செய்வது எனும் தீர்மானத்துடன் நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
Thursday, March 12, 2020
அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் மாதாந்திர தேர்வு 2
திருப்பூர் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் 11/03/2020 அன்று மாதாந்திர தேர்வுகள் (இரண்டாம் நாள்) நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சகோதரர்.MI சுலைமான், மற்றும் மாவட்ட மதரசா பொறுப்பாளர் சகோதரர். இம்ரான் அவர்களும், இணைந்து இந்த தேர்வை நடத்தினார்கள்.
மாணவிகளின் கற்கும் திறனை மேம்படுத்த இதுபோல மாதாந்திர மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
மாணவிகள் இந்த தேர்வில் ஆர்வமுடன் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, March 11, 2020
அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் மாதாந்திர தேர்வு
திருப்பூர் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் 11/03/2020 அன்று மாதாந்திர தேர்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சகோதரர்.MI சுலைமான், மற்றும் மாவட்ட மதரசா பொறுப்பாளர் சகோதரர். இம்ரான் அவர்களும், இணைந்து இந்த தேர்வை நடத்தினார்கள்.
மாணவிகளின் கற்கும் திறனை மேம்படுத்த இதுபோல தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
மாணவிகள் இந்த தேர்வில் ஆர்வமுடன் கலந்து பயன்பெற்றனர்.
கல்லூரி முதல்வர் சகோதரர்.MI சுலைமான், மற்றும் மாவட்ட மதரசா பொறுப்பாளர் சகோதரர். இம்ரான் அவர்களும், இணைந்து இந்த தேர்வை நடத்தினார்கள்.
மாணவிகளின் கற்கும் திறனை மேம்படுத்த இதுபோல தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
மாணவிகள் இந்த தேர்வில் ஆர்வமுடன் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அனுப்பர்பாளையம் கிளைசந்திப்பு 11/03/2020
NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் எனும் அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூரில் மாவட்ட சிறை முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளைசந்திப்பு 11/03/2020 காலை 6:30முதல் அனுப்பர்பாளையம் மர்கஸில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், அவர்கள் கலந்து கொண்டு,
அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைப்பது என்றும்,
நிர்வாகிகள் பேச்சாளர்கள் நமது செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்து சமுதாய நலனுக்கு சேவைகள் செய்வது என்பது பற்றியும்,
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
5 கிளைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 10/03/2020
NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம்
நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சார்பில் மாநிலம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் எனும் அறிவிப்பை
தொடர்ந்து
திருப்பூரில் மாவட்ட சிறை முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் முடிவு செய்யப்பட்டது.
அதற்காக *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
திருப்பூர் மாவட்டம் மங்கலம், இந்தியன் நகர், VKP, RP நகர் மற்றும் சின்னவர்
தோட்டம் ஆகிய 5 கிளைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 10/03/2020 இரவு 9:30முதல் இந்தியன் நகர்
மர்கஸில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட
துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் உள்ளிட்டோர் கலந்து
கொண்டு,
அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன்
ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைப்பது என்றும்,
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், உரிமைகளை வென்றெடுப்பதற்கு இறைவனின் உதவியுடன்
இறைதூதரின் வழிகாட்டுதல்களை மீறாமல், முஸ்லிமாகவே இருந்து போராடுவது என்றும்,
நமது நோக்கம் அநியாய சட்டங்கள் நீக்கப்பட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அணைத்து சமுதாய மக்களும் அமைதியாக இந்தியாவில் வாழ வழிவகை ஏற்படுத்துவதே என்றும்,
அமைதியை குலைக்கும் வகையில் சமூக எதிரிகள் யார் செயல்பட்டாலும் நாம் சரியான வழிகாட்டுதலுடன் ஜனநாயக அடிப்படையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்றும்,
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, March 10, 2020
அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி கண்காணிப்பு ஆய்வு 09032020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/03/2020 அன்று திருப்பூர் அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி கண்காணிப்பு ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட மதரசா கண்காணிப்பாளர் சகோதரர். யாசர் அரபாத் அவர்களும், சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்களும் இணைந்து, மதரசா மாணவிகளின் கல்விதரம் மற்றும் திறன் பற்றி பல்வேறு ஆய்வுகள் செய்தனர்.
மாணவிகளின் திறனை மேம்படுத்திய ஆசிரியர்களை பாராட்டி, கூடுதலாக மாணவிகளின் கல்வித்திறனை அதிகரிக்கும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, March 04, 2020
Tuesday, March 03, 2020
மாபெரும் தர்ணா போராட்டம் _1032020- தாராபுரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அலங்கியம் ஆகிய கிளைகள் சார்பாக
தாராபுரம் அலங்கியம் ஆகிய கிளைகள் சார்பாக
தாராபுரம் அண்ணா சிலை அருகில்
01/03/2020 அன்று CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி, மாபெரும் தர்ணா நடத்தது.
இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.
இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்
அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு, தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.
தமிழகத்தில் வாழ்கிற மக்கள் பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.
CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.
மேற்கு வங்கம், பஞ்சாப், பீகார், , பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.
மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள் பாதுகாத்தது போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.
CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.
மேற்கு வங்கம், பஞ்சாப், பீகார், , பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.
மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள் பாதுகாத்தது போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.
சேக் அப்துல்லாஹ், அப்பாஸ், மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)






































