Sunday, October 10, 2021

பெரியதோட்டம் கிளை சந்திப்பு (1 /13) 10102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  பெரியதோட்டம் கிளை சந்திப்பு




10.10.2021 அன்று   மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் , மாவட்ட துணைச்செயலாளர்  பெரியதோட்டம் ரபீக்  அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்,  இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

கிளைத்தலைவராக இருந்த ரபீக் அவர்களை மாவட்ட துணை செயலாளராக எடுத்துள்ளதால் அடுத்து கிளை நிர்வாக தேர்வு செய்வது பற்றியும் வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக எப்படி செயல்படுத்துவது என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

தொடர்ந்து கிளை சார்பில் நடைபெறும் ஆண் குழந்தைகள்  மதரசா மற்றும் பெண் குழந்தைகள் மதரசா ஆசிரியர்கள் சந்திப்பு நடத்தி நிறை குறைகள் கேட்டறியப்பட்டு,



சிறப்பாக செயல்பட கூடுதல் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment