Saturday, October 16, 2021

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (2) 15102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (2)

 15-10-2021 அன்று  மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் 


1) மாவட்ட நிர்வாகிகள் கிளைகளை சந்தித்ததில் கிளைகளின் கோரிக்கைகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டது. 



2) இன்ஷா அல்லாஹ்  கிளைகளுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் இனிவரும் நாட்களில்  தவறாமல் மாதம் ஒருதடவை கிளை சந்திப்பு நடத்துவதும் அதை தொடர்ச்சியாக செய்வதெனவும் முடிவுகள் எடுக்கப்பட்டது. 


3) கிளைகளில் பொதுக்குழு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.


4) மாவட்ட செயற்குழு நடத்துவது சம்பந்தமாகவும் ஆண் தாயீக்களுக்கான தர்பியா நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.


5) அல்கைராத் மதரஸா பட்டமளிப்பு நிகழ்ச்சி  சம்பந்தமாக பேசப்பட்டு வசூல் மற்றும் ஏற்பாட்டிற்கான குழு அமைக்கப்பட்டது. 


6) திருப்பூர் மாவட்டம்  சார்பாக மக்தப் மதரஸாக்களை மேம்படுத்துவதற்காக மாவட்ட மதரஸா பொறுப்பாளர் தலைமையின் கீழ்  ஆலிம்கள் ஆசிரியர்கள்  அடங்கிய 6 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டது.



7) மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியப்படுத்த மாவட்ட மருத்துவரணி தலைமையின் கீழ் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 


8) மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் மற்றும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்த குழு அமைப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.


9) ஐவேளை தொழுகை நடைபெறாத கிளைகளில் அந்தந்த கிளை நிர்வாகிகள் ஒன்றினைந்து பஜ்ர் தொழுகையை ஜமாஅத்தாக  அந்தந்த கிளைகளிலேயே தொழுகை நடத்த வலியுறுத்தவது என்றும்


10) கிளைகளுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பில் உள்ள கிளை நிர்வாகிகளை ஒன்றினைத்து வாட்ஸப் குரூப் ஆரம்பம் செய்து தாவா பணிகளை வீரியப்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்வதெனவும்


 11) மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு மற்றும் அல்கைராத் மதரஸாவிற்கான பொருளாதார பற்றாக்குறை  சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு சந்தா நன்கொடைகளை அதிகபடுத்த முயற்சி செய்வதெனவும்


12)கிளைகளில் இமாம் நியமனம் சம்பந்தமாக  ஆலோசிக்கப்பட்டது



13) கிளைகளில் சிறந்த முறையில் கிராஅத் ஓதக்கூடிய மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வீடியோக்கள் தயார் செய்து வெளியீடு செய்வதெனவும்


14) காலண்டர் தயார் செய்வது குறித்து பேசப்பட்டது. 


15) மாவட்ட மர்கஸில் நடைபெறும் ஜூம்ஆ மற்றும் தினசரி திருப்பூர் மாவட்டம் சார்பாக குர்ஆன் வசனங்களின் போஸ்ட் தயார் செய்வது சம்பந்தமாகவும் பேசப்பட்டது.  


ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment