தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மருத்துவ அணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம்
14/12/21 அன்று காலை மங்கலம் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் அவினாசி அனீஸ், மங்கலம் அப்பாஸ், சின்னவர் தோட்டம் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்றது.
1. மாவட்டம் முழுவதும் உள்ள இரத்த தான கொடையாளர் விபரம் சேகரிக்க கிளைகள் தோறும் இரத்த பிரிவு கண்டறியும் முகாம் நடத்த வழிகாட்டுதல் வழங்குவது என்றும்
2. மாவட்டம் முழுவதும் உள்ள இரத்ததான கொடையாளர்கள் விபரம் பதிவு செய்த விபரங்களை பயன்படுத்தி மாவட்டத்தின் எந்த பகுதிக்கும், அவசர இரத்த தான சேவையை சிறப்பாக செயல்படுத்துவது என்றும்
3. இரத்த தான அவசியம் குறித்த
பிரச்சாரம் செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோட்டீஸ், ப்ளெக்ஸ் தயார் செய்வது மற்றும்
சமூக வலைதளங்களில் பதிவுகள் மூலம் பிரச்சாரம் செய்வது என்றும்
முடிவுகள் எடுக்கப்பட்டு குழு அங்கத்தினர்களுக்கு பணிகளின் பொறுப்புகள்
பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும் வருங்கலத்தில் மருத்துவ அணி செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்து மக்களுக்கு சேவை செய்ய
வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment