தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் 04/03/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.
இன்ஷாஅல்லாஹ் வரும் வாரத்தில் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கிளை நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசித்து அந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட மாணவரணி சார்பாக இன்று அல்லாஹ் 13/03/2022 அன்று நடத்தவுள்ள Group IV தேர்வு வழிகாட்டு நிகழ்ச்சி முகாம் பற்றி கேட்டறிந்து, உடனடியாக போஸ்டர் தயாரிக்கவும், சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
கிளைகளின் கோரிக்கைகள் ஆலோசனைகள் கடிதங்கள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
கிளைகளின் பொதுக்குழு, பொருளாதார தணிக்கை கோரிக்கைகளுக்கு
தணிக்கை
1. செரங்காடு- திங்கள் பஜ்ர்
2. தாராபுரம் - செவ்வாய் அஸர்
பொதுக்குழு
கோம்பைத்தோட்டம் - வியாழக்கிழமை
என முடிவு செய்து நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment