Sunday, March 06, 2022
திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 04/03/2022
ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு 04/03/2022
அனுப்பர்பாளையம் கிளை தணிக்கை 04/03/2022
சின்னவர் தோட்டம் கிளை ஆலோசனைக் கூட்டம் 28/02/2022
Saturday, March 05, 2022
மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (5) 03/03/2022
Monday, February 28, 2022
திருப்பூர் மாவட்ட செயற்குழு 27/02/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 27/02/2022 ஞாயிறு அன்று காலை 10:30 முதல் 1:00 மணிவரை திருப்பூர் மாவட்ட மர்கஸில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் பொருளாதார பராமரிப்பு பற்றி இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் கிளை நிர்வாகத்திற்கு வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் பராமரிப்பு பற்றி விளக்கம் வழங்கினார்கள்
மாவட்ட துணைசெயலாளர் நூர்தீன் அவர்கள் பில் புக், வவுச்சர் புக் பற்றியும், மாவட்ட தணிக்கை பற்றியும் விளக்கம்
வழங்கினார்கள்.
மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் கிளை சார்பில் தாவா மற்றும் சமுக சேவைப்பணிகளை செயல்படுத்த பொருளாதாரத்தை இலகுவாக திரட்டும் வழிமுறைகள் மற்றும் அதனை உரிய வகையில் செலவு செய்த தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பது பற்றி விளக்கம் வழங்கினார்கள்.
மாநில பொருளாளர் காஞ்சி இப்ராகிம் அவர்கள் தினசரி வரவு
செலவு புத்தகம் (டேபுக்) எழுதுவது பற்றியும், கணக்கு பராமரிப்பில் உள்ள
சந்தேகங்கள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, February 26, 2022
திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/02/2022
ஆண்டியகவுண்டனூர் கிளைசந்திப்பு 25/02/2022
Friday, February 25, 2022
படையப்பா நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 24.02.2022
Saturday, February 19, 2022
பல்லடம் கிளை நிர்வாக சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதன் சிறப்பு அமர்வில் பல்லடம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு,
கிளை அலுவலகம், மர்கஸ் சீரமைப்பது, வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள்
பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.
நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட
நிர்வாகத்திடம் வைத்தனர்.
மாவட்ட
நிர்வாகம் சார்பில் கிளை
நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு தகுந்த
வழிகாட்டுதல்கள் மற்றும்
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அறிவொளி நகர் கிளை நிர்வாக சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர்
சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதன் சிறப்பு அமர்வில் அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள்
மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு,
புதிதாக உருவான கிளையாக உள்ளதால், கிளை அலுவலகம், மர்கஸ்
அமைப்பது, வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள்
பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.
நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட
நிர்வாகத்திடம் வைத்தனர்.
மாவட்ட
நிர்வாகம் சார்பில் கிளை
நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு தகுந்த
வழிகாட்டுதல்கள் மற்றும்
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, February 18, 2022
திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 18/02/2022
Sunday, February 13, 2022
அறிவொளி நகர்_ திருப்பூர் மாவட்ட 31வது புதிய கிளை துவக்கம் 13/02/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 31வது புதிய கிளை அறிவொளி நகர் கிளை 13/02/2022 அன்று துவக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
சார்பில் பல்லடம் அருகில் உள்ள அறிவொளி
நகர் பகுதியின்
கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 13/02/2022 அன்று
அறிவொளி நகர் புதிய
கிளை உருவாக்கப்பட்டு, கலந்து
கொண்டவர்களால்,
சகோ. பஷீர்அஹமது 8838083542
சகோ. முபாரக் அலி 9095025587
ஆகியோர் கிளையின் பொறுப்பாளர்களாக தேர்வு
செய்யப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
கிளை நிர்வாகம் பற்றியும், உறுப்பினர், நிர்வாகிகளின் பொறுப்புகள் கடமைகள் பற்றியும் விளக்கம் வழங்கி, அறிவொளி நகர் பகுதியில் சிறந்தமுறையில் மக்கள் சேவையுடன் ஓரிறை கொள்கையை எடுத்து சொல்லும் வழிமுறைகளை ஆலோசனைகளாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
பல்லடம் கிளை பொது மசூரா 13/02/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லடம் கிளை பொது மசூரா 13/02/2022 அன்று பல்லடம் கிளை மர்கஸில்
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்
ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு
தெளிவு படுத்தி, கருத்துக்கள் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.
மக்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் குறித்து விளக்கம் வழங்கி
வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை
உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க
வேண்டும் என்றும்,
கிளை நிர்வாகம் சார்பில் பொது மக்களை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் சிறப்பாக
பணிகளை செயல்படுத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பல்லடம் கிளை சந்திப்பு 13/02/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லடம் கிளை சந்திப்பு 13/02/2022 அன்று காலை
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய் முன்னிலையில் பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை நிர்வாக
செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள்
குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப்
பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
