Saturday, March 19, 2022

அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு 18/03/2022

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  அனுப்பர்பாளையம்  கிளை பொதுக்குழு    மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,

மாவட்ட தொண்டரணி  செயலாளர் கிளைப் பொருப்பாளர் சுலைமான் அவர்கள் முன்னிலையில்  அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 18/03/2022 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் நடைபெற்றது.

 

 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள், வரவு செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.

 தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.

 

அதில் தேர்வு செய்யப்பட புதிய கிளை நிர்வாககுழு 

 

தலைவர்: சையது சாகுல் ஹமீது 9952975793

செயலாளர்: ஆசிக்  8220325181

பொருளாளர்:  முஹம்மது அலி 9663847977

துணைத் தலைவர் :  சர்புதீன் 9843720636

துணைச் செயலாளர் : நூர்தீன் 812274707

மருத்துவ அணி : நிஜாமுதீன் 9087844956

தொண்டரணி : ஹக்கீம் 9626451651

வர்த்தகர் அணி : செல்வர் அலி 9787216745

தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த  ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, March 18, 2022

திருப்பூர் மாவட்ட செயற்குழு 18/03/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 18/03/2022 வெள்ளி அன்று மாலை 5:30 முதல் 9:00 மணிவரை  
திருப்பூர் மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத் அவர்கள் 
*ரமலானை வரவேற்போம்* எனும் துவக்கவுரை நிகழ்த்தினார்கள் 

 மாவட்ட துணைச்செயலாளர் சகோ.அப்துல் ரஷீது அவர்கள் ரமலான் இரவு பயான் தாயீக்கள்  சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்.




மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத் அவர்கள் இரவு தொழுகை இமாம் சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்.

மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான் அவர்கள்  கஞ்சி, இப்தார் ஏற்பாடு மற்றும் வசூல் சம்பந்தமாகவும்,  பில் புத்தகம், வவுச்சர் சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்.

மாவட்ட துணைச்செயலாளர் சகோ.நூர்தீன் அவர்கள் சஹர் பாங்கு, ஒற்றைபடை இரவு சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்.


மாவட்ட துணைச்செயலாளர் சகோ. காஜா அவர்கள்,
பெருநாள் திடல் ஏற்பாடு பற்றிய தகவல்களை வழங்கினார்கள்.

மாவட்ட துணைத்தலைவர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் பித்ரா விநியோகம் சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்

மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத் அவர்கள் 
ரமலான் மாத தாவா பணிகள் சம்பந்தமாகவும்,  தாவா சென்டர்க்கு அனுப்ப வழிமுறை தகவல்களை வழங்கினார்கள். 

மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் ஏழை குடும்பங்களுக்கு உதவும் வகையில், ரமலான் மாத கிட் வழங்குவது பற்றிய தகவல்களை வழங்கினார்கள்

மாநில செயலாளர் சகோதரர். செங்கோட்டை பைசல் அவர்கள்
ஹிஜாப் அநியாய தீர்ப்பும் நமது  எதிர்ப்பும் எனும் தலைப்பில் நமது செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்து அநீதியை எதிர்த்து நீதியை பெறுவது என விளக்க உரை நிகழ்த்தினார்கள்.



ரமலான் மாத தாவா பணிகளுக்காக அனைத்து கிளைகளுக்கும் சஹர்,  இப்தார் நேர அட்டை,
சஹர் நேர நிகழ்ச்சி ப்ளக்ஸ், ரமலானை வரவேற்போம் நோட்டீஸ், இரவு தொழுகை சம்பந்தமான போஸ்டர்கள், DTP தாவா பார்மெட்கள் ஆகியவைகளை

  
அனைத்து கிளைகளும் தங்களது பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் மாவட்டம் சார்பாக தயார் செய்து வழங்கப்பட்டது


 மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, March 16, 2022

மங்கலம் கிளை சந்திப்பு 15:03:2022


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  சார்பாக மங்கலம்  கிளை சந்திப்பு 15:03:2022  அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு

 மாவட்ட துணைத் தலைவரும், கிளையின் பொறுப்பாளருமான சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையிலும்,  மாவட்ட செயலாளர் சகோ.யாசர்அரபாத்,   மாவட்ட துணை செயலாளர் நூர்தீன்  அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

 
இன்ஷா அல்லாஹ் வரும் 20:03:22 அன்று கிளை சார்பாக  நடத்தும் அன்சாரியா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி  பணிகள் குறித்து கேட்டறிந்து  ஆலோசனைகள் வழங்கப்பட்டது 

அன்சாரியா பெண்கள் கல்லூரி மேல்தளம் கட்டிடம் கட்டுமாணப்பணிகள் பற்றி  கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை தணிக்கை_ 16/03/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  செரங்காடு கிளை தணிக்கை 16/03/2022 அன்று செரங்காடு கிளை  மர்கஸில், மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்,
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத்  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் செரங்காடு கிளை சார்பாக பல்வேறு தாவா சமுதாய பணிகளை செய்த வகை பொருளாதார வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டது.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஒப்படைத்த பொருளாதாரங்களை உரியமுறையில் பயண்படுத்தவும்,

சிறப்பான முறையில்  வரவு செலவு கணக்கு விபரங்களை பராமரிக்கவும்

வருங்காலத்தில் பொருளாதார கணக்கு  விபரங்களை இலகுவாகவும், சிறப்பாகவும் பராமரிக்க கூடுதல்  ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, March 15, 2022

அவசர மாவட்ட நிர்வாக ZOOM ஆலோசனைக்கூட்டம் 15/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக,  15/03/2022 அன்று இரவு 10:00 மணிக்கு,  அவசர மாவட்ட நிர்வாக ZOOM ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.


இதில் அரசியல் சாசனத்தையும் இஸ்லாத்தில் உள்ளதையும் புறந்தள்ளிவிட்டு மனம் போன போக்கில் இன்று (15/03/2022) வழங்கப்பட்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் #ஹிஜாப்_(அநியாய)_தீர்ப்பை _கண்டித்து,

 மக்களின் கொந்தளிப்பை கருத்தில் கொண்டு, எந்தெந்த வகையில் அநீதியை எதிர்ப்பது, என்னென்ன செயல்பாடுகளை செயல்படுத்தி நீதியை பெறுவது,
நமது செயல்பாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்றும்
 ஆலோசனைகள் செய்யப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

 
உடனடியாக #கண்டன_போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் ஒட்டுவது என்றும்,

பொதுமக்களுக்கு இந்த அநீதியை பகிரங்கமாக எடுத்து சொல்லும் வகையில் #மாபெரும்_கண்டன_பொதுக்கூட்டம் நடத்துவது என்றும்,

இஸ்லாமியர்களுன் அடிப்படை உரிமைகளை பறித்த செயலை கண்டித்து, தமிழக முதல்வர் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் எனும் வகையில் அறிக்கையும்,  அரசாணையும் பிறப்பிக்க வலியுறுத்தியும்,

சட்டமன்றம்,பாராளுமன்றத்தில் இந்த அநியாய தீர்ப்பை கண்டித்தும், இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படாமல் இந்தியாவில் வாழ குரல் குடுத்து, சட்டமியற்றவும் வலியுறுத்தி

நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து MLA, MP க்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது என்றும்

இந்த வாரம் நமது மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த அநீதியை கண்டிப்பது என்றும், ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

G.K.கார்டன் கிளை சந்திப்பு 15/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக G.K.கார்டன்  கிளை சந்திப்பு   15/03/2022 அன்று பஜ்ர்க்கு பிறகு  G.K.கார்டன்  கிளை மர்கசில்  மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணை செயலாளர் காஜா பாய், அவர்கள் முன்னிலையில்,   நடைபெற்றது.

 

 இதில் கிளை சார்பில்  செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடத்தவும், மக்தப் மதரசா ஆண்டு விழா நடத்தவும்,  மர்கஸ் பயான், பெண்கள் பயான் நடத்தவும், சமுதாயப்பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்தவும்  ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

M.S.நகர் கிளைசந்திப்பு 14/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக M.S.நகர்  கிளைசந்திப்பு   14/03/2022 அன்று  இரவு 9:00மணி முதல்  மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைசெயலாளர் நூர்தீன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர்  முன்னிலையில்,   M.S.நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 


 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

இன்ஷாஅல்லாஹ் தற்போது இயங்கிவரும் கிளை  மர்கஸ் பொதுமக்களின் அவசிய தேவைகளுக்கு தேவையான இடப்பற்றாக் குறையை போக்கவும், கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தவும்  கிளை நிர்வாக செயல் திட்டத்திற்கு  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, March 14, 2022

அறிவொளி நகர் கிளை சந்திப்பு 13/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவொளி நகர்  கிளை சந்திப்பு   13/03/2022 அன்று மக்ரிபுக்கு பிறகு மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைசெயலாளர் காஜா பாய், அவர்கள் முன்னிலையில்,   நடைபெற்றது.

 
 இதில் கிளை சார்பில்  செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
இன்ஷாஅல்லாஹ்
 அறிவொளி நகர்  பகுதியில் கிளை மர்கஸ் அமைத்து, சமுதாயப்பணிகள், தாவாபணிகளை செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, March 13, 2022

கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் _ 13032022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் 13/03/2022 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸில்,

மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,   நடைபெற்றது.








 

இதில் சகோதரர்.  M.R.ஜாவித் அஸ்ரப். B.tech (GOLD MEDALIST), MS (IIT, MADRAS)., அவர்கள் தமிழகஅரசு சார்பாக  நடத்தும்

TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி, விழிப்புணர்வு இல்லாத சமுதாய மக்கள் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற ஆர்வமூட்டி, வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.

 

 

இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் அரசு வேலைவாய்ப்பு பற்றியும், அதைப் பெற ஆர்வமும், சரியான வழிகாட்டுதல்களும் பெற்றதாக கருத்து தெரிவித்தனர்.

 

மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிளை நிர்வாகிகள் தமது பகுதி மக்களுக்கும் இந்த செய்திகளை கொண்டு சேர்த்து வாய்ப்புள்ளவர்கள் பயன்பெற செய்வதாக தெரிவித்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

யாசின் பாபு நகர் கிளைசந்திப்பு 13/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்
  யாசின் பாபு நகர்  கிளைசந்திப்பு   13/03/2022 
அன்று   காலை பஜ்ர் தொழுகைக்கு பின்

மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட மாணவர் அணி செயலாளர் தன்வீர் முன்னிலையில்,  யாசின் பாபு நகர்   கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

 

 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் நடத்தவுள்ள மதரசா ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது, மாவட்டம் சார்பில் நடத்தும் நிர்வாகரீதியான செயல்பாடுகளில் கிளை நிர்வாகிகள் அவசியம் பங்கெடுப்பதன் அவசியம், மற்றும்

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Saturday, March 12, 2022

அவசர இரத்ததானம் _MSநகர் கிளை _12032022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 12/03/2022  அன்று திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் காங்கேயம் பகுதியை சார்ந்த சகோதரி  வாசுகி  அவர்களின் அவசர சிகிச்சைக்கு  B+  இரத்தம் ஒரு யூனிட் சகோ அப்சர்  அவர்களால் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

அவசர இரத்ததானம்_ வெங்கடேஸ்வரா நகர் கிளை _ 11032022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 11/03/2022 வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை (GH) யில் அவசர சிகிச்சைக்கு  O+  இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

Friday, March 11, 2022

குமரன் காலனி கிளைப் பொதுக்குழு _10032022





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  குமரன் காலனி கிளை பொதுக்குழு    மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,

மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில்  குமரன் காலனி கிளை மர்கஸில் 10/03/2022 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் நடைபெற்றது.

 

 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 கிளை நிர்வாகம் சார்பில்  நிர்வாக சீரமைப்பு  செய்ய கோரிக்கையை ஏற்று நிர்வாக சீரமைப்பு  செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாககுழு 


தலைவர்: முஹம்மது பாரூக் 9445511766

செயலாளர்: ரஃபிக் 9894220589

பொருளாளர்: உசைன் அகமது 7339467632

துணைத் தலைவர் :பயாஸ் 6385873727

துணைச் செயலாளர் :நாசர் 9976771186

மாணவரணி :நியாஸ் 6380992070


தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.



 

அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _MSநகர் கிளை _10032022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
M.S. நகர் கிளையின் சார்பாக 10/03/2022 வியாழக்கிழமை அன்று திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் காங்கேயம் பகுதியை சார்ந்த

 சகோதரி  வாசுகி  அவர்களின் அவசர சிகிச்சைக்கு  B+  இரத்தம் ஒரு யூனிட் சகோ ராஜாமுகம்மது அவர்களால் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, March 10, 2022

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் _10/03/2022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 10/03/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாகக் குழுக் கூட்டம் மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது

இன்ஷாஅல்லாஹ் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பாக நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நிகழ்ச்சி நிரல் மற்றும்  பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் 18/03/2022 அன்று   நடைபெறவுள்ள ரமலான் வழிகாட்டுதல் மாவட்ட செயற்குழு நிகழ்ச்சி நிரல் மற்றும்  பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம்_ VSA நகர் கிளை _ 11032022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
V.S.A நகர் கிளையின் சார்பாக 09/03/2022 புதன்கிழமை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நவீன என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்கு  O+  இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்


Wednesday, March 09, 2022

மாவட்ட மாணவரணி ஆலோசனைக்கூட்டம் _ பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் 08/03/2022 அன்று பெரியதோட்டம் கிளை  மர்கஸில், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,
மாவட்ட வர்த்தகரணி அப்துல்லாஹ் MISc., மாவட்ட மாணவரணி குழு இர்பான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி,

அனைத்து சமுதாய மக்களையும் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற வழிகாட்ட,

 இன்ஷாஅல்லாஹ் வரும் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு வழிகாட்டுதல் முகாமிற்கு பெருவாரியான இளைஞர்களை திரட்டி வந்து பங்கேற்ற அறிவுறுத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பெரியதோட்டம், செரங்காடு, VSAநகர், GKகார்டன்
ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் மக்களை திரட்டி வந்து கலந்து கொள்ளவதாக வாக்களித்தனர்

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாணவரணி ஆலோசனைக்கூட்டம் _ MSநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் ஆலோசனைக்  கூட்டம் 08/03/2022 அன்று MS நகர் கிளை  மர்கஸில், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,மாவட்ட மாணவரணி குழு இர்பான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி,

அனைத்து சமுதாய மக்களையும் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற வழிகாட்ட,

 இன்ஷாஅல்லாஹ் வரும் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு வழிகாட்டுதல் முகாமிற்கு பெருவாரியான இளைஞர்களை திரட்டி வந்து பங்கேற்ற அறிவுறுத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட ms நகர், sv காலனி, அனுப்பர்பாளையம்
குமரன் காலனி ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் மக்களை திரட்டி வந்து கலந்து கொள்ளவதாக வாக்களித்தனர்

அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை தணிக்கை 08/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  தாராபுரம் கிளை தணிக்கை 08/03/2022 அன்று தாராபுரம் கிளை  மர்கஸில், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில்,
 மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமாணப்பணி உட்பட பல்வேறு தாவா சமுதாய பணிகளை செய்த வகை பொருளாதார வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டது.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஒப்படைத்த பொருளாதாரங்களை உரியமுறையில் பயண்படுத்தவும், 

 சிறப்பான முறையில்  வரவு செலவு கணக்கு விபரங்களை பராமரிக்கவும் 

வருங்காலத்தில் பொருளாதார கணக்கு  விபரங்களை இலகுவாகவும், சிறப்பாகவும் பராமரிக்க கூடுதல்  ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

கிளை மர்கஸ் கட்டுமாணப்பணிகளை விரைவாக முடிக்கவும், 

கிளை மக்தப் மதரஸாவை உடனடியாக துவங்கவும்,

தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.