தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 25/12/2020 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி திருப்பூர் *மங்கலம் நால்ரோடு* பகுதியில் நடைபெற்றது.
Saturday, December 26, 2020
வேளாண் சட்டம் 2020 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Tuesday, December 22, 2020
பொது ஆலோசனைக் கூட்டம் - மங்கலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 21/12/2020 அன்று இஷா விற்கு பின் மங்கலம் கிளை மர்கஸில் மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மங்கலம், வடுகன்காளிபாளையம், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், R.Pநகர் ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மங்கலம் கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 25/12/2020 அன்று நடத்தவுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தின் அவசியம் பற்றியும்,
மங்கலம் பகுதி கிளைகளின் பங்களிப்பு பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட கிளை சகோதரர்கள் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றி அடையும் வகையில், உத்வேகமாக ஆர்ப்பாட்ட பணிகளை செய்து,
மங்கலம் பகுதியில் சமூக நல்லிணக்கம் உருவாகும் வகையில் பணிகளை அமைத்து, பொதுமக்களின் நன்மதிப்பை பெரும் வகையில் நீதிக்கு போராட மக்களை திரட்ட உறுதி வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, December 20, 2020
படையப்பா நகர் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர் சித்தீக் அவர்கள் தலைமையில் 20/12/2020 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.
கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று
கீழ்க்கண்ட *புதிய
நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது.
தலைவர் : சம்சுதீன் 8778648691
செயலாளர்: முஹம்மது ரபீக் 9361469802
பொருளாளர் : அப்துல் சமது 9952312152
தொடர்ந்து வருங்கால தாவா
பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, December 19, 2020
ஹவுசிங் யூனிட் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர் சேக் பரீத் அவர்கள் தலைமையில் 19/12/2020 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளுக்கு பணிகளை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்: ரியாஜுதீன் 9042651553
செயலாளர்: மைதீன் 9715152537
பொருளாளர்: முஹம்மது ரபீக் 9243870071
துணைத்தலைவர் : ஜமால்தீன்
துணைசெயலாளர் : மன்சூர்
தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, December 15, 2020
மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 14/12/2020 அன்று இஷா விற்கு பின் சின்னவர்தோட்டம் கிளை மர்கஸில் மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிளைகளின் பணிகள் குறித்து கேட்டறிந்து, கிளை பணிகளை மேம்படுத்துவது குறித்தும்
அல்ஹம்துலில்லாஹ்
Monday, December 14, 2020
அவசர இரத்த தானம் -செரங்காடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 14/12/2020 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் வனிதா நாயக் என்ற வடமாநில சகோதரியின் மகப்பேறு சிகிச்சைக்காக
அல்ஹம்துலில்லாஹ்...
Friday, December 11, 2020
ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 11/12/2020 அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு ஆண்டியகவுண்டனூர் கிளை மர்கஸில் ஜும்ஆ விற்கு பிறகு மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிளையின் தாவா பணிகள் குறித்தும் தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் இளைஞர்கள் செய்ய வேண்டியவை பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்
Thursday, December 10, 2020
இந்தியன் நகர் கிளை சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 10/12/2020 அன்று காலை இந்தியன் நகர் கிளை சந்திப்பு இந்தியன் நகர் மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிளையின் தாவா பணிகள் குறித்தும் தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், தனி நபர் தாவா செய்வது பற்றியும், ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்
ஆம்புலன்ஸ் சேவை
தமிழ் நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்
சலுகை கட்டணத்தில் அணைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை
தொடர்புக்கு : 8122622220, 8122622221
இந்த சேவைப்பணிக்கு உங்களின் ஒத்துழைப்புகளை தாரளமாக வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
Tuesday, December 08, 2020
மாநில நிர்வாக சந்திப்பு - குமரன் காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை மர்கஸ் இடத்தை மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்களுடன் மாநிலச் செயலாளர் சகோதரர் கோவை T.அப்பாஸ் அவர்கள் 7/12/2020 அன்று நேரில் பார்வையிட்டு,
மார்க்கப் பணிகள், சமுதாய சேவை பணிகளை வீரியமாக செய்வதற்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, December 07, 2020
இலவச புக் ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 6/12/2020 ஞாயிறு காலை 9.மணி முதல் சாதிக்பாட்சா நகர் பகுதியில் அமைக்கப்பட்டது.
அதில் 30 க்கும் மேற்பட்ட பிறகொள்கை மற்றும் பிற மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி சுமார் 60 மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுபிற மத சகோதரர்கள் விரும்பி கேட்டதற்கினங்க திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகளை விளக்கி சகோ. அப்பாஸ் அவர்கள் (மங்கலம்) அவர்கள் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார்
அல்ஹம்துலில்லாஹ்
பெண்களுக்கான தர்பியா _உடுமலை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 அசர் தொழுகைக்கு பின் 5 மணியிலிருந்து 8 மணி வரை பெண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது.
இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில்
நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞிர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்
மார்க்க கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு - சின்னவர் தோட்டம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளை சார்பில் 06/12/20 அன்று மாலை5:15 மணிக்கு ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது
அதில் முதலாக சகோ தவ்பிக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழுந்தை வளர்ப்பு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்
இரண்டாவதாக சகோ யாசர்அரபாத் அவர்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்
மதரசாவிற்கு லீவு எடுக்காமல் வந்த மாணவ மாணவியர்களுக்கு கிளை சார்பில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக குறை நிறைகள் கேட்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி _ வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-12-2020 அன்று கிளையில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கான நவம்பர் மாத பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ரபீக் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் முதலாவதாக சகோ. அப்துல் ரஹ்மான் (MISC) அவர்கள் "மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
கடந்த நவம்பர் மாதம் முழுவதும் இருநேர மதரஸா வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக மதரஸாவிற்கு வருகை தந்த 9 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
மேலும் தொழுகை ஒழுக்கம் என அனைத்து செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற 2 மாணவ மாணவிகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
குர்ஆனின் 30ம் பாகம் முழுவதும் மனனம் செய்த A.சுஹைப் என்ற மாணவரின் ஆர்வத்தை மென்மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் 6-12-2020 அன்று கிளையில் நடைபெற்ற பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ரபீக் அவர்கள் ஊக்கப் பரிசு வழங்கினார்
அதைதொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசுகளாக பேனா வழங்கப்பட்டது.
வரக்கூடிய நாட்களில் அனைத்து மாணவ மாணவிகளும் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து மதரஸா சம்பந்தமான குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றோர்களிடம் கேட்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
இலவச புத்தக விநியோகம் _ அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 06/12/20, அன்று மாலை 5 மணியளவில் புக்ஸ்டால் போடப்பட்டது.
இதில் பிற மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளித்து அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, December 06, 2020
ஆண்களுக்கான தர்பியா _ உடுமலை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 பஜர் தொழுகைக்கு பின் 6 மணியிலிருந்து 8 மணி வரை ஆண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது.
இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில்
நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, December 05, 2020
பல்லடம் கிளை சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 04/12/2020அன்று பல்லடம் கிளை சந்திப்பு பல்லடம் கிளை மர்கஸில் மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரசீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்






































