தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெண் தாயிக்கள் மற்றும் தஃவா குழு பெண்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள் தலைமையில் 11/04/2022 அன்று மாலை 5:30 மணிக்கு மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
இதில்
பெண் தாயிக்கள் மற்றும் பெண்கள் தஃவா குழு சகோதரிகள் எவ்வாறெல்லாம் தஃவா பணிகளை சிறப்பாக செயல்படுத்தலாம் என்று பல்வேறு ஆலோசனைகளை மாநில பொதுச்செயலாளர் சகோதரர். அப்துல் கரீம் அவர்கள் வழங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் பற்றியும் , அதில் இந்த வருடம் துவங்கவுள்ள பெண்களுக்கான சிறப்பு வகுப்புகள் பற்றியும் விபரங்களை தொகுத்து வழங்கினார்கள்.
கலந்து கொண்ட சகோதரிகள் அல்கைராத் வகுப்புகள் பற்றிய தகவல்களை தங்கள் பகுதி மாணவியர்கள், மகளிர்களுக்கு வீடு வீடாக சேர்த்து பெண்கள் நமது கல்வியகத்தில் சேர்ந்து பயன்பெற ஒத்துழைக்க கேட்டுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment