Saturday, February 15, 2020

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 14/02/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 14/02/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள்சமுதாய சேவைப்பணிகள்கிளைகளின் நிர்வாகசெயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட மர்கஸில் இன்றைய ஜும்ஆ வசூல் 15025/= இரண்டு பிறமத சகோதரர்களுடைய  குழந்தைகளின் மருத்துவ செலவினங்களுக்கு, மருத்துவ உதவியாக பகிர்ந்து வழங்கப்பட்டது.

மாநில தலைமையின் மேற்பார்வையில் இயங்கும் அல்இர்ஷாத் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி கட்டுமானப்பணிகளுக்கு அவசரமான பற்றாக்குறை உள்ள பொருளாதார தேவையை ஈடுசெய்ய,  

இன்ஷாஅல்லாஹ்  திருப்பூர் மாவட்ட அணைத்து மர்கஸ்களிலும் வரும் மார்ச் மாதம் மூன்றாம் ஜும்ஆ வசூல் செய்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட தலைமையின் மேற்பார்வையில் இயங்கும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி க்கு அடிப்படை தேவையான டெஸ்க் மற்றும் இதர வசிதிகளை உடனடியாக செய்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


இந்த நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில்  CAA, NRC,NPR  கருப்பு சட்டங்களை நடைமுறை படுத்தக் கூடாது எனும் கோரிக்கையை முன்னிறுத்தி தர்ணா நடத்திய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மீது, சில மோசமான காவல் அதிகாரிகளின் உத்திரவால் கொடூரமான முறையில் தாக்கி தடியடி நடத்திய செய்தி கிடைத்தது.



இந்த அநியாய செயலை கண்டிக்கவும், இந்த செயலை செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும்,
இனி இதுபோல அநியாய அராஜகங்கள் எங்கும் நடைபெறாமல் இருக்க, நமது கண்டனங்களை எதிர்ப்பை வலுவாக தெரிவிக்க


உடனடியாக அவசர ஆலோசனை செய்து மாநில தலைமையின் வழிகாட்டுதல்  அடிப்படையில், காவல் கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை 15/02/2020 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

உடனடியாக கிளைகளுக்கு தகவல் சொல்லி அணைத்து பகுதி பள்ளிகளில் அறிவிப்பு செய்து மக்களை திரட்டிவர அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment