Saturday, February 08, 2020

M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு 07/02/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 07/02/2020அன்றுமாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் M.S.நகர் கிளை நிர்வாக  சந்திப்பு  நடைபெற்றது.


M.S.நகர் பகுதியில் நிறுத்தப்பட்டு இயங்கிவந்த மாவட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மாற்றம் காரணமாக மாவட்ட மர்கஸ் உள்ள கோம்பைத்தோட்டம்  பகுதிக்கு மாற்றம் செய்யப்பட காரணங்களை கிளை நிர்வாகிகள் கேட்டறிந்தனர்.



அந்த ஆம்புலன்ஸ் பணிகளால் M.S.நகர் பகுதியில் அணைத்து சமுதாய மக்களுக்கும் சமூக சேவை செய்யப்பட்டு வந்ததால் மீண்டும் தமது கிளை பகுதியில் ஆம்புலன்ஸ் இயங்க கோரிக்கை வைத்தனர்.


மாவட்ட ஆம்புலன்ஸ் அணைத்து பகுதிக்கும் பயன்படும் வகையில் இயக்கப்படும் என்பதை தெரிவித்து,
சமுதாய சேவைப்  பணிகளை  வீரியமாக செய்யும்  வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் M.S.நகர் கிளை   நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment