Sunday, March 15, 2020

திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 13/03/2020




CAA, NPR, NRC ஐ அரசாங்கம் திரும்ப பெறும் வரை தொடர் போராட்டத்தின் ஒன்றாக,
மாநில நிர்வாகம் அறிவித்த சிறை நிரப்பும் போராட்டத்தை
இன்ஷாஅல்லாஹ் வரும் மார்ச் 18 அன்று காலை 11:00 மணிக்கு, திருப்பூர் மாவட்ட சிறை முன்பு நடத்த,


*திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்*

13/03/2020  அன்று *வெள்ளிக்கிழமை மாலை 7:30 மணி முதல் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.


நமது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக நாம் நடத்தவுள்ள போராட்டத்தை எப்படி நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்கான அவசியமான செயல்வீரர்கள் கூட்டத்தில்,


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாம் என்றாலே கட்டுப்படுதல்" எனும் தலைப்பில் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.


சகோதரர். சபீர்அலி அவர்கள் NPR என்றால் என்ன? என்றும், சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்.

மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் நமது போராட்டத்தை எப்படி அமைப்பது எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்.
அனைத்து கிளைகளிலிருந்தும் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
மாவட்ட மாணவரணி செயலாளர் நன்றியுரையுடன் செயல்வீரர்கள் கூட்டம் நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:

Post a Comment