Monday, August 02, 2021

மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக கிளையில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கான ஜூலை மாத பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி 1-8-2021 அன்று நடைபெற்றது.

 


இதில் முதலாவதாக மதரஸா மாணவ, மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்ததாக சகோ.யாஸர் அரபாத் அவர்கள் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

அதை தொடர்ந்து மதரஸா சம்பந்தமான குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றோர்களிடம் கேட்கப்பட்டது. 


மதரஸா குறித்து நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கப்பட்டது.

பள்ளியோடு அதிக தொடர்பில் இருந்த மதரஸா மாணவர்.யாஸர் அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment