Saturday, October 09, 2021

மங்கலம் கிளை சந்திப்பு (1/4) 9102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, மங்கலம் கிளை சந்திப்பு

09.10.21 அன்று காலை கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், கிளை மர்கஸ் அமைக்க வழிகாட்டுதல் மற்றும் இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.



கூடுதலாக கிளை மர்கஸ் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment