தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும்
இன்ஷாஅல்லாஹ் 10/01/2020 அன்று உடுமலையில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்ட பாதிப்புகளை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி அமைக்க பூர்வாங்க ஆலோசனைகள் செய்யப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணிக்காக, மாவட்ட செயற்குழு நடத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.
கிளைகளின் தாவா பணிகள், செயல்பாடுகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment