தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 24/12/2021 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் இன்ஷாஅல்லாஹ் 26/12/2021 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படவுள்ள மாவட்ட பெண் பேச்சாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் பற்றியும் அதை எப்படி சிறப்பாக நடத்தவேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டு நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இன்ஷாஅல்லாஹ் 26/12/2021 அன்று கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் நடத்தப்படவுள்ள மக்தப் மதரஸா ஆண்டு விழா பற்றியும், அதை சிறப்பாக கிளை நடத்த எப்படி வழிகாட்டுதல்கள் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார்.
கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment