தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்
உடுமலை, சாதிக் நகர், மடத்துக்குளம் ஆகிய கிளைகளின் ஒருங்கிணைந்த அவசர ஆலோசனைக்கூட்டம்
07/02/2022 அன்று உடுமலை மர்கஸில் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் மற்றும் மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதில் கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக எதிர்வரும் 11/02/2022 அன்று இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது.
மேலும் கிளை நிர்வாகிகள் மக்கள் மத்தியில் இந்த அநீதி பற்றி பிரச்சாரம் செய்யவும்,
கண்டன ஆர்பாட்டத்திற்காக செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும்,
அநீதிக்கு எதிராக, மக்களின் உரிமையை காக்கும் போராட்டத்திற்காக பெருவாரியான மக்களை திரட்டி வரவும் வலியுறுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment