Sunday, February 28, 2021

மனநிறைவை பெற்று தந்த மருத்துவமனை தாவா / VKP கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  28-2-2021 அன்று திருப்பூர் அரசு பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும்  நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு




திருப்பூர் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.அப்பாஸ் மற்றும் சகோ.ஜாஹிர் அவர்கள் தலைமையில் வடுகன்காளிபாளையம் கிளை நிர்வாகிகள் நேரில்  சென்று

 

பிரசவ வார்டில் குழந்தைகளை ஈன்றெடுத்த மற்றும் குழந்தைகளை பெற இருக்கும் தாய்மார்களை சந்தித்து அவர்களை நலம் விசாரிக்கப்பட்டது.

 

மேலும் அவர்களுக்கு மனதைரியத்தை அதிகபடுத்தும் வகையில் சகோ.அப்துல்லாஹ் (MISC)  அவர்கள் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்கள்.

 

குழந்தைகளுடைய ஆரோக்கியத்திற்கு தேவையான  தாய்ப்பாலின் அவசியம் மற்றும் தாய்மார்கள் பேண வேண்டிய  மனநிலை சார்ந்த விஷயங்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

 

 

பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம் என்ற நபிகளாருடைய பொன்மொழிக்கு ஏற்றவாறு நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்யப்பட்டு வரும் பல்வேறு மனிதநேய பணிகள் குறித்து விளக்கப்பட்டு


 

மருத்துவமனையில் தங்கி பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து பெண்களுக்கும்  பிரட்பிஸ்கட் ,நேந்திர வாழைப்பழம் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 

இதில் திருப்பூர் மாவட்ட மருத்துவரணிக்கான (இரத்த தான தேவைக்கு மற்றும் ஆம்புலன்ஸ் தேவைக்கான தொடர்பு எண்கள் அடங்கிய) விசிடிங் கார்டுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 

சிகிச்சை பெற்றுவரும் அனைத்து பெண்களும் மற்றும் செவிலியர்களும்  மனமகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

 

 

அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் திரும்பி வரும் வரை  சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டே யிருக்கிறார்                                      ஸஹீஹ் முஸ்லிம் : 45

 

 

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

 


No comments:

Post a Comment