தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/01/2020 அன்று மாலை 2:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 25/01/2020 அன்று நடந்து முடிந்த கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற மாபெரும் பேரணியின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.
பல கிளைகள் உளப்பூர்வமாக பணியாற்றி பெரும் திரளான பொதுமக்களை திரட்டி வந்திருந்ததை பாராட்டும் வகையில் கிளை பொறுப்பாளர்கள் பேசவேண்டும் என்றும்,
மாவட்டம் சார்பில் நன்றி அறிவிப்பு சுற்றறிக்கை போடவும் முடிவு செய்யப்பட்டது.
தாவா பணிகளை வீரியமாக செய்ய வேண்டியுள்ள பகுதி கிளைகளை கண்டறிந்து
அந்த கிளைகளுக்கு, அணைத்து உறுப்பினர்களையும் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பு செயற்குழு வைத்து தாவா பணிகளின் நன்மைகள் மற்றும் நோக்கத்தை தெளிவுபடுத்தி, ஆர்வமூட்டி கூடுதல் நிர்வாக சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
அந்த அடிப்படையில் முதல் கட்டமாக மாவட்ட மர்கசை சுற்றியுள்ள கிளைகளுக்கு இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு செயற்குழு வைப்பது என்றும் முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.



No comments:
Post a Comment