Tuesday, August 10, 2021

அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாவட்ட நிர்வாக சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 10/08/2021 அன்று அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாவட்ட நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

 


மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டசெயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர்  மதரசா கண்காணிப்பாளர் சகோதரர். யாசர் அரபாத் மற்றும் சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்களும் கலந்துகொண்டு

 

மாணவிகளிடம்,  கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தில் நடைபெறுகின்ற மதரசா குறை நிறைகள் கேட்கப்பட்டது.

 

மேலும் அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்து மாணவிகளின் அவசியமான தேவைகள் விரைவில் நிறைவு செய்ய உறுதி வழங்கப்பட்டது.

 

 

மாணவிகள் கிடைத்துள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கல்வித்திறனை வளர்த்து இம்மை மறுமை வெற்றியாளர்களாக ஆக வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிவுரைகளை  வழங்கினார்கள்.

 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment