தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, மடத்துக்குளம் கிளை சந்திப்பு
10.10.2021 அன்று காலை மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்
மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத், மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கிளையில் நடைபெறும் மக்தப் மதரஸாவில் நபிவழி தொழுகை மற்றும் ஏகத்துவ கல்வியை போதிக்கும் ஏற்பாடு செய்வது என்றும்
பெற்றோர் சந்திப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி நடத்தவும் வழிகாட்டப்பட்டது.
மாணவர் இளைஞர்களை வென்றெடுக்கும் வகையில் செயல்திட்டங்களை செயல்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
ஜும்ஆ உரை & வெள்ளி பயான் நிகழ்ச்சி மாவட்ட மாநில தாயிகள் மடத்துக்குளம் மர்கஸுக்கு அனுப்பி மக்களுக்கு சத்தியத்தை சொல்ல ஏற்பாடு செய்வது என்றும்
கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment