தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பர்பாளையம் கிளை தணிக்கை 04/03/2022 அன்று அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில், மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் மர்கஸ் பணி உட்பட பல்வேறு தாவா சமுதாய பணிகளை செய்த வகை பொருளாதார வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டது.
பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஒப்படைத்த பொருளாதாரங்களை உரியமுறையில் பயண்படுத்தி, சிறப்பான முறையில் வரவு செலவு கணக்கு விபரங்களை பராமரித்த கிளை நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்து,
வருங்காலத்தில் பொருளாதார கணக்கு விபரங்களை இலகுவாகவும், சிறப்பாகவும் பராமரிக்க கூடுதல் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment