தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 18/03/2022 வெள்ளி அன்று மாலை 5:30 முதல் 9:00 மணிவரை
திருப்பூர் மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
*ரமலானை வரவேற்போம்* எனும் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்
மாவட்ட துணைச்செயலாளர் சகோ.அப்துல் ரஷீது அவர்கள் ரமலான் இரவு பயான் தாயீக்கள் சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத் அவர்கள் இரவு தொழுகை இமாம் சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்.
மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான் அவர்கள் கஞ்சி, இப்தார் ஏற்பாடு மற்றும் வசூல் சம்பந்தமாகவும், பில் புத்தகம், வவுச்சர் சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்.
மாவட்ட துணைச்செயலாளர் சகோ.நூர்தீன் அவர்கள் சஹர் பாங்கு, ஒற்றைபடை இரவு சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்.
மாவட்ட துணைச்செயலாளர் சகோ. காஜா அவர்கள்,
பெருநாள் திடல் ஏற்பாடு பற்றிய தகவல்களை வழங்கினார்கள்.
மாவட்ட துணைத்தலைவர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் பித்ரா விநியோகம் சம்பந்தமான தகவல்களை வழங்கினார்கள்
மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத் அவர்கள்
ரமலான் மாத தாவா பணிகள் சம்பந்தமாகவும், தாவா சென்டர்க்கு அனுப்ப வழிமுறை தகவல்களை வழங்கினார்கள்.
மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் ஏழை குடும்பங்களுக்கு உதவும் வகையில், ரமலான் மாத கிட் வழங்குவது பற்றிய தகவல்களை வழங்கினார்கள்
மாநில செயலாளர் சகோதரர். செங்கோட்டை பைசல் அவர்கள்
ஹிஜாப் அநியாய தீர்ப்பும் நமது எதிர்ப்பும் எனும் தலைப்பில் நமது செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்து அநீதியை எதிர்த்து நீதியை பெறுவது என விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
ரமலான் மாத தாவா பணிகளுக்காக அனைத்து கிளைகளுக்கும் சஹர், இப்தார் நேர அட்டை,
சஹர் நேர நிகழ்ச்சி ப்ளக்ஸ், ரமலானை வரவேற்போம் நோட்டீஸ், இரவு தொழுகை சம்பந்தமான போஸ்டர்கள், DTP தாவா பார்மெட்கள் ஆகியவைகளை
அனைத்து கிளைகளும் தங்களது பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் மாவட்டம் சார்பாக தயார் செய்து வழங்கப்பட்டது
மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment