தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 15/03/2022 அன்று இரவு 10:00 மணிக்கு, அவசர மாவட்ட நிர்வாக ZOOM ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் அரசியல் சாசனத்தையும் இஸ்லாத்தில் உள்ளதையும் புறந்தள்ளிவிட்டு மனம் போன போக்கில் இன்று (15/03/2022) வழங்கப்பட்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் #ஹிஜாப்_(அநியாய)_தீர்ப்பை _கண்டித்து,
மக்களின் கொந்தளிப்பை கருத்தில் கொண்டு, எந்தெந்த வகையில் அநீதியை எதிர்ப்பது, என்னென்ன செயல்பாடுகளை செயல்படுத்தி நீதியை பெறுவது,
நமது செயல்பாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்றும்
ஆலோசனைகள் செய்யப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
உடனடியாக #கண்டன_போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் ஒட்டுவது என்றும்,
பொதுமக்களுக்கு இந்த அநீதியை பகிரங்கமாக எடுத்து சொல்லும் வகையில் #மாபெரும்_கண்டன_பொதுக்கூட்டம் நடத்துவது என்றும்,
இஸ்லாமியர்களுன் அடிப்படை உரிமைகளை பறித்த செயலை கண்டித்து, தமிழக முதல்வர் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் எனும் வகையில் அறிக்கையும், அரசாணையும் பிறப்பிக்க வலியுறுத்தியும்,
சட்டமன்றம்,பாராளுமன்றத்தில் இந்த அநியாய தீர்ப்பை கண்டித்தும், இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படாமல் இந்தியாவில் வாழ குரல் குடுத்து, சட்டமியற்றவும் வலியுறுத்தி
நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து MLA, MP க்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது என்றும்
இந்த வாரம் நமது மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த அநீதியை கண்டிப்பது என்றும், ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment